வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் தற்போது நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக உள்ள ஜெசி ஜாக்குலின்(50 வயது) மற்றும் அவரது கணவர் ராஜேஸ்வரன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து குமரி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!.
நாகர்கோவில் மாநகரில் பொன்னப்ப நாடார் காலனியிலுள்ள வீட்டையும் ஊழல் செய்த பணத்துக்கு ஈடு செய்யும் விதத்தில் அரசுடமையாக்க உத்தரவு!.
கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவு செய்த வழக்கில் கன்னியாகுமரி ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய அமலா ஜெசி ஜாக்குலின் மற்றும் அவரது கணவர் ராஜேஸ்வரன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்த வழக்கில் குமரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்று வருட சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் ஊழல் செய்த பணத்தை ஈடு செய்யும் விதமாக பொன்னப்ப நாடார் காலணியிலுள்ள அவரது வீட்டையும் அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அமலா ஜெசி ஜாக்குலின் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி வளர்ச்சித் துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளராக அமலா ஜெசி ஜாக்குலின் என்பவர் பணிபுரிந்தார். 01-12-1999 முதல் 31-03-2009 காலகட்டத்தில் 25,40,972 ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததான புகாரின் பெயரில் அப்போது, கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய திரு சுந்தர்ராஜ் வழக்குப்பதிவு செய்து இருந்தார். அந்த வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் (06-12-2024) அன்று தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் முதல் குற்றவாளியாக ஊராட்சி வளர்ச்சி துறையில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் அமலா ஜெசி ஜாக்குலினும் வேலை எதுவும் இல்லாத அவரது கணவர் ராஜேஸ்வரன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு இருந்தனர். அதில் இரண்டு பேருக்கும் தலா மூன்று வருடம் சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்தார். மேலும் நாகர்கோவில் மாநகரில் பொன்னப்ப நாடார் காலணியிலுள்ள அவரது வீட்டை அரசுடைமையாக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு கூறியது ஊழல்வாதிகளுக்கு பலத்த அடியாக அமைந்து உள்ளது. அப்போதைய டிஎஸ்பி சுந்தர்ராஜ் ஓய்வு பெற்ற சென்ற நிலையில் தற்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருக்கும் ஹெக்டர் தர்மராஜ் வழக்கை தொடர்ந்து நடத்தி வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment