விரைவில் 100 வீரர் - வீராங்கனைகளுக்கு அரசு வேலை முதல்வர் கையால் வழங்கப்படும் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பேச்சு!
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் 288 ஊராட்சியின் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி துறை மூலம் 19.15 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 9.21 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைத்தல், 7200 பேருக்கு அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி துணை முதல்வருக்குக்கு செங்கோல் வழங்கி சிறப்பிக்கப்பட்டதோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், யாசினி இரண்டு வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி துணை முதல்வர் கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, முடிக்கப்பட்ட கட்டிடங்கள், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் துவக்கி வைத்தார். முன்னதாக அண்ணல் அம்பேத்காரின் 68வது நினைவு தினத்தையொட்டி மேடையில் அமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கார் திருவுருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்பேத்கார் கொள்கையை கொண்டு செல்லும் திராவிட மாடல் அரசாக செயலாற்றி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என பெருமிதமாக கூறினார். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது போல 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும், பெண்கள் சுயமரியாதையுடன் வாழ மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு இதுவரை 92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. எல்லோரும் எது திராவிட மாடல் அரசு என கேள்வி கேட்பவர்களுக்கு, எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசு, மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்வதாக பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மாதம்தோறும் ரூ.1 கோடியை 16 லட்சம் வழங்கப்படுகிறது. எனவும் அதேபோல் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்பட்டு வருவதாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ஆற்காடு தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், சோளிங்கர் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம், மாவட்ட ஆட்சியாளர் முனைவர் சந்திரகலா, உட்பட வருவாய்த்துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment