Friday, 6 December 2024

காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு இரவு பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.
பெருமாளுக்கும், மஹாலட்சுமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.  திருவோணத்தை முன்னிட்டு சிரவண தீபம் ஏற்றப்பட்டது. சிரோன தீபத்தை கையில் ஏந்தியபடி ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகிகள் பின்பக்கமாக வலம் வந்து இந்த சிரவண தீபத்தை ஏற்றி வைத்து பக்தர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்ய வழிவகை செய்தனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரசாத விநியோகம் நடந்தது. அலங்காரத்தை கோயில் பட்டாச்சாரியார் ஸ்ரீகண்ணன் பட்டாச்சாரியர் மற்றும் குழுவினர் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...