மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நிலத்தை அளந்து கொடுக்க கணவரை வைத்து லஞ்சம் வாங்கிய சர்வேயர் சித்ராதேவி கணவருடன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்குட்பட்ட கீழ உரப்பனூரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (30 வயது) இவர்களுக்கு சொந்தமான உள்ளநிலத்தை அளந்து பட்டா வழங்க விண்ணப்பித்திருந்த பிறகு கொக்குளம் பீர்க்கா சர்வேயர் சித்ராதேவியை அணுகினார்.
ஆனால் நிலத்தை அளக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக சித்ராதேவி கேட்டார். மேலும் லஞ்சப் பணத்தை தன் கணவர் கணேசனிடம் கொடுக்கும்படி அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜித் குமார் இது குறித்து. மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர். ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயன பொடி தடவிய நோட்டுகளை புகார்தாரரான அஜித்குமாரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட நில அளவையாரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர். இதனைத் தொடர்ந்து, மேலக்கோட்டையில் ஒரு இடத்தில் வைத்து நில அளவையர் சித்ராதேவி கணவர் கணபதிவேலுடம் அஜித்குமார் லஞ்சப் பணத்தை கொடுத்தார். அப்போது லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிக்க முயற்சி செய்த கணபதி வேலுவை, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்து அவரை லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக கைது செய்தனர்.
அதே நேரத்தில் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த பெண் நில அளவையர் சித்ராதேவியையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறகு இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளார்.
No comments:
Post a Comment