Sunday, 9 February 2025

கங்காதரசுவாமி உயர்நிலைப் பள்ளியை அறநிலையத் துறையே தொடங்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் கோரிக்கை..!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் வாழ்ந்த ஆன்மீகப் பெரியவரும், சித்தருமான கங்காதரசுவாமியின் பெயரில் உயர்நிலைப் பள்ளியை பிச்சனூர் செல்வ விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்,
அறநிலையத் துறையின் சார்பிலேயே தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
கங்காதரசுவாமி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதில் இருக்கும் சிக்கலைக் கருத்தில் கொண்டு, நெசவாளர்கள், தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் வகையில் மாற்று ஏற்பாடாக அறநிலையத் துறையே புதியதாகப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து குடியாத்தம் நகர அதிமுக செயலாளர் ஜே.கே.என்.பழனி, புதிய நீதிக் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் வக்கீல் எஸ்.சம்பத்குமார், நகரச் செயலாளர் குபேந்திரன், பாமக நகரச் செயலாளர் எஸ்.குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் வக்கீல் என்.குமார், ஆர்.எம்.அன்பரசன், காங்கிரஸ் நெசவாளர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எம்.தேவராஜ், மாவட்டத் தலைவர் கோ.ஜெயவேலு, மாணவர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் வக்கீல் ஜெ.தியாகராஜன், காங்கிரஸ் மாவட்டப் பொருளாளர் ஜி.விஜயேந்திரன், தேமுதிக நகரச் செயலாளர் எம்.செல்வகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் குடியாத்தம் என்.ரமணி, பாஜக முன்னாள் நகரத் தலைவர்  சாய் ஆனந்தன், தமாகா நகரத் தலைவர் ஜெ.தினகரன், அமமுக மாவட்டச் செயலாளர் சத்யா மெஸ் வி.டி.சதீஷ்குமார், அமமுக வக்கீல் பிரிவு நிர்வாகி எம்.செந்தில்குமார், நகரச் செயலாளர் சங்கர், புதிய நீதிக் கட்சியின் நிர்வாகிகள் பி.சரவணன், தி.பிரவீன்குமார், எஸ்.வெங்கடேசன், வி.எம்.எஸ்.கன்னியப்பன், ஆர்.உமா மகேஸ்வரி, விசைத்தறி நெசவாளர்கள் சங்கத் தலைவர்கள் ஆர்.அண்ணாமலை, சி.நாராயணன், வக்கீல்கள்  வி,வடிவேல், கே.பி.கோபி, கே.ரஜினி, வி.எம்.பரந்தாமன், கே.எம்.இளங்கோ, கே.தியாகு, வி.குப்பன், சி.எஸ்.சுதாபிரபு, எஸ்.பரத், இ,.ரமேஷ், உட்பட பல்வேறு கட்சியினர் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த மனு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், அமலு விஜயன், வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் எஸ்.செளந்தரராஜன் மற்றும் குடியாத்தம் ஆர்.டி.ஓ., தாசில்தார், நகராட்சி கமிஷனர், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் உட்பட அரசுத் துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது
குடியாத்தம் நகரின் மையப் பகுதியான பிச்சனூர் கங்காதரசுவாமி மடாலய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துமாறு 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவருகிறோம். இதற்காக. அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.1 லட்சம் பணத்தையும் 2015-இல் செலுத்திவிட்டோம். இந்த நிலையில், பள்ளிக்கு இட வசதி பற்றாக்குறையாக இருப்பதாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஆனால், பள்ளிக்கு சற்றுதொலைவில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான செல்வ விநாயகர் பெருமாள் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட ஐந்து ஆயிரம் சதுர அடிக்கும் மேற்பட்ட காலி இடம் உள்ளது. உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர இடம்தான் பற்றாக்குறை என்றபட்சத்தில், இந்த இடத்தில் உயர்நிலைப் பள்ளியை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறோம். இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தை கல்வித் துறைக்கு மாற்றம் செய்ய பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறும் நிலையில், மேற்கண்ட இடத்தில் அறநிலையத் துறையின் சார்பாகவே உயர்நிலைப் பள்ளியை அமைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுகிறோம். மறைந்த கங்காதரசுவாமி என்பவர் 19-ஆம் நூற்றாண்டில் குடியாத்தம் நகரில் வாழ்ந்த மகான், சித்தர், ஆன்மீகப் பெரியவர். அவர் நகர மக்களுக்கு பல்வேறு ஆன்மீகக் கருத்துகளைப் போதித்து, பல்வேறு கோயில்களுக்கும் திருப்பணிகளைச் செய்தவர். அவரது பெயரிலே செயல்படும் கங்காதரசுவாமி நடுநிலைப் பள்ளியையே தரம் உயர்த்த வேண்டுகிறோம். இதற்கு இருக்கும் சிக்கல்களைத் தீர, நகர வட பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவரும் அரசு உயர்நிலைப் பள்ளியை அறநிலையத் துறையே தொடங்க அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

விஜிலென்ஸ் போலீசாரின் வளையத்துக்குள் கலால் உதவி ஆணையர்: காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம் கைப்பற்றல்

விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றன...