மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த கோரி முதல்முறையாக 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நோட்டீஸ் அனுப்புவது மதுரை மாநகராட்சி வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்கிறார்கள்.
1971ல் மதுரை நகராட்சி மாநகராட்சியான பிறகு முதல் பெண் ஆணையாளராகவும், 71வது ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., பொறுப்பேற்க உள்ளது, மதுரைக்கே மிகப்பெரிய பெருமையை தந்து வருகிறது.
மதுரை மாநகராட்சியில் 2024 பிப்ரவரி 2ம் தேதி பொறுப்பேற்றிருந்த ஆணையாளர் தினேஷ்குமார், ஐஏஎஸ்., தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளராக தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்?
மதுரையைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் பழமையான பெரிய நகரங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்கள் வாழும் நகரம் மதுரை மாவட்டமாகும்.. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன..
ஆனால், கடந்த சில வருடங்களாகவே, மதுரை மாநகராட்சியில் ஆணையாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது. இதற்கு காரணம், மேயர், அமைச்சர், ஆளுங்கட்சி மாவட்ட பொறுப்பாளர் என 3 பேர், மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுகிறார்களாம்.
மதுரை மாநகராட்சி ஆணையாளரால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றும், அரசியல் நெருக்கடிகளை சமாளித்து நிர்வாக ரீதியான பணிகளை கையில் எடுப்பதற்குள் மாநகராட்சி ஆணையாளரையே மாற்றி விடுவதாகவும், நிறைய விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எனினும், அவையெல்லாம் முறியடிக்கப்பட்டு, பல்வேறு பணிகளும் செயல்படுத்தப்பட்டன..
அத்துடன், நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு, சாக்கடைப் பிரச்சனைகள், குடிநீரில் கழிவு நீர் கலப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட்டும் வருகின்றது.
குறிப்பாக, மதுரை மாநகராட்சியில் 2024 பிப்ரவரி 2ம் தேதி பொறுப்பேற்றிருந்த ஆணையாளர் தினேஷ்குமார், ஐஏஎஸ்., மாநகர நகர் பகுதியில் குப்பையை அகற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தினார். பல நிறுவனங்களிடமிருந்து பல லட்சம் வரி நிலுவையை கறார் காட்டி வசூலித்தார். மாநகராட்சி பணியாளர்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி பாராட்டுக்களை பெற்றார்.
இந்நிலையில், இப்போது தினேஷ்குமார், ஐஏஎஸ்., அதிகாரியான இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சித்ரா விஜயன், ஐஏஎஸ்., மதுரை மாநகராட்சியின் 71 வது ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசன் மின்ஆளுமைத்துறை இணை இயக்குனரான சித்ரா விஜயன், ஐஏஎஸ்., புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். 2019 பேட்ச் ஐஏஎஸ்., அதிகாரியான இவர் திருச்சி, தர்மபுரி உட்கோட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றியவர். அத்துடன், தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment