Wednesday, 4 December 2024
காட்பாடி வண்டறந்தாங்கலில் உள்ள ஸ்ரீ கால பைரவர் ஆலயத்தில் கும்பாபிஷேக நிறைவு விழா!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கல் பஜனை கோயில் தெருவில் ஸ்ரீ கால பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இதில் ஸ்ரீ காலபைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த ஆலயத்தில் கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் தொடங்கியது. இதில் சிறப்பு அபிஷேகமாக பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அதில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதை தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிறைவு விழாவில் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பெண்ணை ஆட்கொண்ட ராமநாத ஈஸ்வரர் திருக்கோயில் சிவ சித்தர் அம்மையார் வருகை புரிந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்த கும்பாபிஷேக நிறைவு விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காலபைரவரை தரிசித்தனர். இந்த பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீநந்தகோபால்சாமி செய்திருந்தார். இந்த காலபைரவர் கோயில் ஒருங்கிணைப்பாளர் காட்பாடி செங்குட்டை ஸ்ரீ சாரதி மேற்பார்வை பணிகளை மேற்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!
பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment