Saturday, 7 December 2024

ஓசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில தலைவர் ஆலயமணி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி எம்எல்ஏ, பங்கேற்று, இம்மாதம் 21 ஆம் தேதி திருவண்ணாமலையில், நடைபெற உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி பேசினார். 

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. மணி தெரிவித்திருப்பது;-  இந்த மாதம் 21 ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் நடைபெற உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாட்டில், தமிழக முழுவதிலும் இருந்து சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. 

குறிப்பாக மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த மாவட்டத்தில் விளை நிலங்களை சேதப்படுத்துவதும் விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதுமான யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். 
ஓசூர் போன்ற மிகப்பெரிய வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் காவல் நிலையங்களை அதிகப்படுத்துவதுடன் காவலர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஓசூர் மாநகராட்சியை தலைமையிடமாகக் கொண்டு ஓசூர், தளி, வேப்பனஹள்ளி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டம் உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றேன்.
இதனால் இப்பகுதியின் வளர்ச்சிக்கு மிகவும் ஏதுவாக இருக்கும்
என்று அவர், செய்தியாளர்களின்  சந்திப்பில் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...