Thursday, 5 December 2024

குடியாத்தத்தில்: சர்வதேச தன்னார்வர் தினத்தையொட்டி முதியோர் இல்லத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் டிசம்பர் 5 சர்வதேச தன்னார்வர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடந்த்து.

சர்வதேச தன்னார்வர் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திலுள்ள ஆர்.எஸ். பகுதியிலுள்ள நம்பிக்கை முதியோர் இல்லத்தில் அணைக்கட்டு, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், தன்னார்வர்கள் சேர்ந்து முதியோர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. மீனா தலைமையில் நடைபெற்றது, இதில் முதியோர்களுக்கு தேவையான போர்வை, சேலை , லுங்கி, டவல் , பேஸ்ட் , பிரஸ் , சோப்பு, பிஸ்கட் சீப்பு போன்றவை தன்னார்வர்கள் மூலம் வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் வார்டு உறுப்பினர்கள், தன்னார்வர்கள் கலந்துக் கொண்டனர். அனைவருக்கும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா  தொண்டு நிறுவனத்தின் மூலம் வழிகாட்டுதல் மற்றும் செயல்பாடுகளை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் தங்கள் பகுதியில் சிறப்பாக குழந்தைங்களுக்கு சேவை செய்யும் தன்னார்வையை ஊக்குப்படுத்தும் வகையில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் மூலம் பாராட்டு சான்றிதழ் மற்றும் சீல்டு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுந்தர் நம்பிக்கை முதியோர் இல்லம் நிறுவனர் மற்றும் திருமதி செண்பகவல்லி முருகேசன், அலங்காநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜான் சுகுமார், முதன்மை மேலாளர் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா வேலாயுதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார், வெங்கடேசன், திட்ட மேலாளர்கள் மகாலட்சுமி, பைரவி, விஜயா ஆகியோர் மற்றும் முதுநிலை ஒன்றிய மேலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...