Sunday, 8 December 2024

திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 7 பேர் குடும்பத்திற்கு கேபிஒய் பாலாா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினர்.

ஃபெஞ்சல் புயலால் அதீத மழையால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். கேபிஒய் பாலா திருவண்ணாமலை வஉசி நகருக்கு சென்று இறந்தவர்களின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு ரூ.2 லட்சம் வழங்கினார்.

பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை கொட்டியது. சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் வெள்ளம் ஏற்பட்டது. திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில் கடந்த 1ம் தேதி தீபம் ஏற்றும் மலை பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

வீடுகள் மண்ணில் புதைந்தன. ராஜ்குமார் என்பவர் வீட்டில் இருந்த 7 பேர் நிலச்சரிவில் சிக்கினர். ராஜ்குமார், அவரது மனைவி மீனா மற்றும் குழந்தைகள் கவுதம், வினியா, மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி தொடங்கி நடந்தது.

மழை மற்றும் மின்தடை உள்ளிட்டவற்றால் மீட்பு பணி தாமதமானது. நிலச்சரிவில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியாததால் அவர்கள் இறந்தனர். மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டது. 3 நாள் மீட்பு பணிக்கு பிறகு அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டது.

இந்நிலையில் தான் திருவண்ணாமலை நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை கேபிஒய் பாலா நேரில் சென்று பார்த்தார். அதன்பிறகு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை கேபிஒய் பாலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவர்களின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இறந்தவர்கள் சேர்ந்த 4 குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் என்று மொத்தம் ரூ.2 லட்சத்தை கேபிஒய் பாலா வழங்கி உதவி செய்தார்.

முன்னதாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் மண் சரிவில் சிக்கி பலியான 7 பேரின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கினார்.

No comments:

Post a Comment

அரசு பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வம் காட்டும் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களின் பிள்ளைகள்!

தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொழில் நகரமாக திகழும் திருப்பூர் உள்ளது. அங்குள்ள புலம்பெயர்ந்தோர...