தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி ஃபெஞ்சல் புயல் காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் பெறப்பட்ட ரூபாய்
5. லட்சம் மதிப்பீட்டிலான பொருட்களை டெம்போ லாரியின் மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நிவாரண பொருட்கள் ஏற்றி செல்லும் லாரியில் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு ஏற்றி கொடுக்கப்பட்டது. அப்போது, குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூ. கமலக்கண்ணன், தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment