ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் தாலுகா புளியங்குடியில் கட்டப்பட்ட நாடக மேடைக்கு பணத்தை விடுவிக்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியை(58 வயது), ராம்நாடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளார்.
புளியங்குடி கிராமத்தில் அருந்ததியர் காலனியில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை அமைக்கும் பணியை ஒப்பந்தாரர் முடிந்துள்ளார். இதற்கு முன்பணமாக ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியனிடம் மீதி தொகையை விடுவிக்குமாறு ஒப்பந்ததாரர் கேட்டுள்ளார். அப்போது பால்பாண்டி ரூ.3000 தனக்கும், ரூ.2000 அலுவலக செலவிற்கும் லஞ்சமாக வழங்குமாறு கேட்டிருக்கிறார். லஞ்சப் பணம் கொடுக்க மனம் இல்லாத ஒப்பந்ததாரர் இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரனின் அறிவுறுத்தலின்படி புகார்தாரரிடம் ரசாயனம் தடவிய ரூ.5000த்தை கொடுத்து லஞ்சம் கேட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுக்கும்படி கூறினர். அதன்படி முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியனிடம் ஒப்பந்ததாரர் கொடுத்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரன் தலைமையிலான போலீசார் பால்பாண்டியை சுற்றி வளைத்து லஞ்சப் பணத்துடன் கையும் கழுவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், விசாரணை நடத்தி ஊழல் வழக்கின் கீழ் முதல் தகவல் அறிக்கையாக ஊழல் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவு பேரில் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment