Saturday, 7 December 2024

ரூ.11.75 லட்சம் லஞ்ச வழக்கில் சிக்கியஊட்டி நகராட்சி ஆணையாளராக இருந்து.. திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையாளர் சஸ்பெண்ட்

கணக்கில் வராத ரூ.11.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஊட்டி நகராட்சி ஆணையராக பணியாற்றிய ஜஹாங்கீர் பாஷா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு அவர் நெல்லை மாநகராட்சியில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஜஹாங்கீர் பாஷா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நகராட்சியின் ஆணையாளராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் சென்னையைச் சேர்ந்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த நவம்பர் 9 ம் தேதி ஜஹாங்கீர் பாஷா காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். ஊட்டி - கோத்தகரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரது காரை அதிரடியாக மடக்கிப்பிடித்து  சோதனை செய்தனர். அப்போது கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

இது கணக்கில் வராத வகையில் ரூ.11.70 லட்சம் பணம் சிக்கியது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.10 மணி நேரம் விசாரணை நடந்தது. ஆனால் பணத்துக்கு அவர் சரியான பதிலை கொடுக்கவில்லை. இதனால் லஞ்சப்பணம் என்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் உறுதி செய்தனர். அதோடு ஜஹாங்கீர் பாஷா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.


அதன்பிறகு கடந்த மாதம் 27 ம் தேதி ஜஹாங்கீர் பாஷாவிற்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. காத்திருப்பு பட்டியலில் இருந்த அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் பிற எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் ஜஹாங்கீர் பாஷா நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு நகராட்சி சீர்திருத்தம் நிர்வாக ஆணையாளர் பிறப்பித்துள்ளார். நெல்லை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் பொறுப்பில் வேறு நல்ல அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுந்த நிலையில் ஜஹாங்கீர் பாஷாவை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...