கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சியில் ரூ. 2 கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஆறு பள்ளிகளின் கட்டடங்களைத் தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திறந்துவைத்தார்.
பின்னர். அவா் நமது நிருபருக்கு அளித்த பேட்டியில்,
ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் குடிநீா் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் 2 வது ஒகேனக்கல் கூட்டுகுடிநீா் திட்ட விரிவாக்கப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஒசூர் மாநகராட்சிக்கு பெங்களூரிலிருந்து மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும். ரூ. 550 கோடி மதிப்பில் புதைகுழி சாக்கடை திட்டம் தொடங்கப்படும். ஒசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்படும். ரூ. 100 கோடி மதிப்பில் ஒசூா் தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் கே.எம்.சரயு, ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனார். ஒசூா் மாநகராட்சி ஆணையாளர். எச்.எஸ்.ஸ்ரீகாந்த், ஒசூர் சார் ஆட்சியாளர் பிரியங்கா, மாநகராட்சி துணை மேயர் ஆனந்தைய்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் டி.ஆர்.சீனிவாசன், மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் மாதேஸ்வரன், மண்டலக் குழு உறுப்பினர் ரவி, மண்டல குழு தலைவர்கள், மாநகர கல்விக் குழு தலைவர் ஸ்ரீதரன், செயற்பொறியாளர் என்.எஸ்.நாராயனன், கண்ணன் மாமன்ற உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்
No comments:
Post a Comment