தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி கே.எ.பி திருமணமண்டபம் மற்றும் அதியமான் கல்லூரியில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான 35 மாவட்டத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கும் கேரம் மற்றும் வால்சண்டை போட்டியை திமுக மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் தளி ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா துவக்கி வைத்தனர்.
அப்போது உடன் மாவட்ட பொருளாளர் சுகுமாரன், பகுதி செயலாளர் ராமு, மாமன்ற உறுப்பினர் மோசின்தாஜ், வார்டு செயலாளர் குமார், முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ், அரசு அதிகாரிகள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment