Thursday, 30 January 2025

வேலூரில் இலங்கை கடைசி மன்னர் கண்ணுசாமி நாயுடு என்கிற ராஜா விக்கிரமசிங்க மகாராஜரின் 193வது நினைவஞ்சலி!

வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள முத்து மண்டபம் பகுதியில் இலங்கை கடைசி மன்னர் கண்ணுசாமி நாயுடு என்கிற ராஜா விக்கிரமசிங்க மகாராஜரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு அவரது 193வது நினைவு நாளையொட்டி காலை 10 மணி அளவில் நீத்தார் வழிபாட்டுச் சடங்குகள் முறைப்படி நடந்தது் இதையடுத்து முற்பகல் 11 மணி அளவில் நினைவஞ்சலி கூட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ செல்லியம்மன் மஹாலில் நடைபெற்றது. 

இந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு தமிழ்நாடு நாயுடு சங்கங்கள் கூட்டமைப்பின் அதிபரும் காஞ்சிபுரம் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ். மனோகரன் நாயுடு தலைமை வகித்தார். 

தமிழ்நாடு நாயுடு சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் வேலூர் எல். சடகோபராமானுஜம் நாயுடு முன்னிலை வகித்து தொகுப்புரை வழங்கினார். 

தமிழ்நாடு நாயுடு சங்கங்கள் கூட்டமைப்பின் நெய்வேலி ஒருங்கிணைப்பாளர் துரை கமலக்கண்ணன் நாயுடு நல்லுரை வழங்கினார். 

இதை தொடர்ந்து ஸ்ரீ விக்கிரமசிங்க மகாராஜா அறக்கட்டளையின் வாரிசுதாரர் மற்றும் தலைவர் ஆர். புருஷோத்தம ராஜா நாயுடு வரவேற்றார். இதைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் வடக்கு மண்டல அமைப்பு தலைவர் மற்றும் மாநில முத்தரையர் சங்கத் தலைவர் டாக்டர் மு. ராஜமாணிக்கம், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் எல். பாலாஜி, ஸ்ரீ அம்பேத்கர் கல்லூரி ஆந்திர பிரதேஷ் அனந்தபூர் எஸ். கிரிதர பிரசாத்யராய், மேட்டூர் பெரியார் ஈவெரா கொள்ளுப்பேரன் கே.வி.கே. சம்பத், வேலூர் மாவட்ட யாதவர் மகாசபைத் தலைவர் எம்.சி. லோகு, மாவட்ட போயர் சங்க விஷாரம் தலைவர் வெங்கடேசன், வேலூர் நன்னெறிக் கல்வி இயக்க துணைத் தலைவர் வி.எஸ். அமீர்ஜான் சாஹிப்,, வேலூர் நன்னெறிக் கல்வி இயக்க செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், வேலூர் மாநில தொழிற்கல்வி ஆசிரியர் கழக தலைவர் வேலூர் செ.நா. ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மாநில, மாவட்ட மற்றும் பட்டி தொட்டிகளின் நாயுடு சங்க பிரதிநிதிகள் சிறப்புரையாற்றினர். 

இதைத் தொடர்ந்து வேலூர் நாயுடு சங்க தலைவர் 7ஜி முரளிதரன் நாயுடு இன்னுரை வழங்கினார். இதில் விக்கிரமசிங்க மகாராஜா அறக்கட்டளை மற்றும் வாரிசுதாரர் தலைவர் ஆர். புருஷோத்தம ராஜா நாயுடு இந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணி அளவில் அனைவருக்கும் அறுசுவை  உணவு பரிமாறப்பட்டது. ஸ்ரீ விக்கிரமசிங்க மகாராஜா அறக்கட்டளையின் செயலாளர் வேலூர் எஸ். மாதவன் நன்றி கூறினார். இந்த சங்கம் ஸ்ரீ விக்கிரமசிங்க மகாராஜா அறக்கட்டளை சார்பில் பதிவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...