Wednesday, 29 January 2025

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர்!

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு கொடியசைத்து துவக்கி வைத்து, இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்தார். உடன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) க.திருலோகசுந்தர், உதவி கோட்டப்பொறியாளர்கள் அன்புஎழில், முருகன், கவிதா மற்றும் உதவிப்பொறியாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சு.மோகன் 
உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...