Friday, 24 January 2025

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியம், கே. வி. குப்பம் சட்டமன்றத் தொகுதி, கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் பட்டி பகுதியில் அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்த கூட்டத்துக்கு குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எல்.எஸ். வனராஜ் தலைமை தாங்கினார். குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் டி. சிவா, வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் வேலழகன், மாநில அமைப்பு செயலாளர் வி. ராமு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டு திரைப்பட  நடிகர் ஸ்ரீஸஃ குறிப்பிடத்தக்கது. வர்த்தக அணி செயலாளர் பி.எச். இமகிரி பாபு, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர், கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவி பி. அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கே. எம். பூபதி, மாநில அமைப்பு செயலாளர் வி ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரைப்பட நடிகரும் அதிமுக தலைமை கழக பேச்சாளருமான நடிகர் குண்டு கல்யாணம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் தொகுதி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி. லோகநாதன், வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் தா. வேலழகன் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக செட்டிகுப்பம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேன் நன்றி கூறினார். இந்த அதிமுக பொதுக்கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றிய செயலாளர் வனராஜ் மிகவும் விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியம், கே. வி. குப்பம் சட்டமன்றத் தொகுதி, கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன்...