வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் (ம) 2025 புத்தாண்டு முதல் அரசியல் பணியை ஏழைகளுக்கு உதவி செய்து தொடங்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தில் கடுமையான குளிரில் வாடும் 100 ஏழைகளுக்கு போர்வை வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமையன்று மாலை 4.30 மணியளவில் பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதியிலுள்ள சிவசக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கி 100 பொதுமக்களுக்கு போர்வைகள் வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சக்கரவர்த்தி, பாஸ்கரன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி ஆடிட்டர். இர்ஃபான் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் மாநில பேச்சாளர் நாட்டாம்கார் அப்துல் அக்பர் நிகழ்வின் நோக்கங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினார். வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் முனுசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் இர்ஷாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட கலைப் பிரிவு தலைவர் காத்தவராயன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராஜசேகரன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஆடிட்டர். ஹரிபாபு மற்றும் நகர, வட்டார நிர்வாகிகள் ஸ்டாலின், ஜலந்தர், பழனிவேல், உஷாராணி, பரஞ்சோதி, ராஜேஸ்வரி, சுஹேல், ஆலியார் தப்ரேஸ், அஹ்மத் பாஷா, பயாஸ் அஹ்மத், அப்சல் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பேரணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment