கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் புத்தாண்டையொட்டி நாடு நலம்பெற வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி 67 வது ஆண்டாக கடலைக்காய் திருவிழா ஓசூர்மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர்,சினிமா துறை நடிகருமான என்.எஸ்.மாதேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமி மீது கடலைக்காயை எரிந்து நூதன வழிபாட்டை மேற்கொண்டனர்.
ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள பிரசித்தி பெற்ற, ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் 67ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று இந்த கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடைபெற்ற விழாவில் ஆஞ்சநேயருக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர். கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் பிரகாரத்தின் மீதும் ஆஞ்சநேயர் சாமியின் மீது எரிந்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பேசிய பக்தர்கள், புத்தாண்டு பிறக்கும் போது ஆஞ்சநேயரின் மனம் குளிரும் வகையில் கடலைக்காயை அவர் மீது எரிந்து வழிபட்டால் நாடு செழிக்கும் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை, பாரம்பரியமாக நடத்தப்பட்ட இந்த திருவிழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் என்.எஸ்.சுரேஷ் மற்றும் ஓசூர் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பாக வழிபாடு செய்து தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள்.
No comments:
Post a Comment