ஆங்கில புத்தாண்டு நாளொன்று நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். நேற்று மாலை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். பின்னர் வெளியே வந்தவரிடம் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் திடீர் சந்திப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அதனை பற்றி பார்ப்போம்.
2025 புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி தற்போது வரை பல இடங்களில் களை கட்டியுள்ளது. உலகமே புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளது. பலரும் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். பல அரசியல் தலைவர்கள், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். பலர் பிடித்தமானவர்களை நேரில் சந்தித்தும், போனில் சந்தித்தும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை வெளியிட்ட புத்தாண்டு செய்தியில், "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்." என்று கூறியிருந்தார். தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தன்னை சந்தித்து வாழ்த்துக்கூற வந்த ரசிகர்களை, போயஸ் கார்டன் வெளியில் போய் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். கையசைத்து உற்சாகமாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனிலுள்ள இல்லததில் புத்தாண்டு நாளொன்று நேரில் சந்தித்தார். இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரஸ்பரம் மாறிக்கொண்டனர். சிறிதுநேரம் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசிவிட்டு காரில் திரும்பினார். வெளியில் காத்திருந்த செய்தியாளர்கள், நடிகர் ரஜினிகாந்த்தை புத்தாண்டு நாளொன்று சந்தித்தது ஏன் என்பது குறித்து தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்து ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், மரியாதைக்குரிய அருமை அண்ணன் ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. மரியாதை நிமித்தமாகத்தான் புத்தாண்டு நாளொன்று ரஜினிகாந்த் அவர்களை நான் சந்தித்தேன். அரசியல் ரீதியாக எந்த விவாதமும் எங்களுக்கு இல்லை.. எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்றார். ரஜினி சார் எப்படி இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.. திடகாத்திரமாக இருக்கிறார். ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment