Wednesday, 1 January 2025
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடிய வேலூர் மாவட்ட எஸ். பி. மதிவாணன்!
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வருகை தந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் கேக் வெட்டி ஆங்கிலப் புத்தாண்டை சக காவலர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த எளிய விழா சித்தூர் பேருந்து நிலையத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நடந்த இந்த நிகழ்ச்சியில் காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, காட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன், காட்பாடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, உதவி ஆய்வாளர் மிதிலேஷ் குமார் மற்றும் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததை கொண்டாடும் வகையில் இந்த கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் பயணித்த பயணிகளுக்கும் போலீசார் விநியோகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
பக்தர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல விடாமல். தடுக்கும் தனிநபர்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செல்வபெருமாள் கோயில் நகர் பகுதி மக்கள் சித்தூர் ரோடு புதிய மேம்பாலம் அருகில் மாரியம்மன் கோயி...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment