வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அண்ணா சாலை, வேலூர் கூட்டுறவு பண்டக அலுவலகம் அருகில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சைதாப்பேட்டை சின்னமலை நியாய விலை கடையில் (09.01.2025) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட
ஆட்சியாளர் வே.இரா. சுப்புலெட்சுமி, ஐஏஎஸ்., அவர்கள் வேலூர் கூட்டுறவு பண்டக சாலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாநகராட்சி மேயர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட் இணைப் பதிவாளர் இராமதாஸ், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் சந்தானம், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி அரசு துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment