Tuesday, 14 January 2025

சேலம் மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வாரிசு வேலை கேட்டு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பிரண்டு கைது!

"25 வயதுடைய" இளம்பெண் ஒருவர் தன்னுடைய தந்தை பேரூராட்சி நிர்வாகத் துறையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வாரிசு அடிப்படையில் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு 25 வயதாகிறது. இவரது அப்பா தூய்மைப் பணியாளராக பணியாற்றி இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில்  விண்ணப்பித்துள்ளார். இதற்காக மண்டலப் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவராஜனையும் சந்தித்து பேசியிருக்கிறார் அந்த இளம்பெண்.

ஆனால் கண்காணிப்பாளர் தேவராஜன் அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, பாலியல் தொல்லை தர துவங்கியதுடன், தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது செல்போனில், தேவராஜன் பேசியதை அப்படியே ரிக்கார்டு செய்து விட்டார்.. இதனையே ஆதாரமாக வைத்து, சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனுவாக தந்துவிட்டார்.

இளம்பெண் ஆதாரத்துடன் தந்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார், கண்காணிப்பாளர் தேவராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அதில், அந்த பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொல்லை தந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பாளர் தேவராஜனை கைது செய்து, சேலம் ஜெயிலிலும் அடைத்திருக்கிறார்கள். 

No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...