Thursday, 9 January 2025

சேத்துப்பட்டு தாலுகாவில் ரேஷன் ஸ்மார்ட் அட்டை வழங்க வட்ட வழங்கல் பிரிவு பெண் அலுவலர் ரூ. 3.ஆயிரம் லஞ்சம்: விஜிலென்ஸ் போலீசார் வைத்தப் பொறியில் சிக்கியுள்ளார்!

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் யாராவது சில அரசு ஊழியர்கள் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு விண்ணப்பம், நிலத்தை அளக்க, சான்றிதழ் பெற பத்திரப்பதிவு வேலைக்காகவும் , ஓட்டுனர் உரிமம் பெற புதுப்பிக்க துறை சார்ந்த அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், சம்பந்தப்பட்ட அந்த மனுதாரர் லஞ்சம் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, அதனை ஆடியோவாக பதிவு செய்யுங்கள்.. அல்லது வீடியோவாக பதிவு செய்யுங்கள்.

அதனை லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்தால், ரசாயணம் தடவிய நோட்டுக்களை கொடுத்து கையும் களவுமாக பிடிக்க அவர்கள் ஏற்பாடு செய்வார்கள். இறுதியில் அந்த அரசு அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்வார்கள். அத்துடன் அந்த குறிப்பிட்ட அரசு அதிகாரியை அதிகாரிகள் உடனே சஸ்பெண்ட் செய்வார்கள். திரும்ப பணியில் சேர்ந்தாலும் நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கை அரசு ஊழியர் எதிர்கொண்டே ஆக வேண்டும். இதனைத் தொடர்ந்து அப்படி ஒரு சம்பவம் தான் நடைபெற்று இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகாவிற்குட்பட்ட தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்குமார் என்பவர் ரேஷன் ஸ்மார்ட் கார்டுக்காக கடந்த 3-ந்தேதி ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க வட்ட வழங்கல் அலுவலர் சுமதி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இந்த விவகாரத்தில் பெண் அதிகாரி சுமதி கையும், களவுமாக சிக்கினார்.. என்ன நடந்தது என்று பார்ப்போம்!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகாவிலுள்ள தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவருடைய மகன் அருள்குமார் ஸ்மார்ட் குடும்ப அட்டை வாங்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து இவர் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுக்காக கடந்த ஜனவரி 3-ந்தேதி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளார். பின்னர் ஜனவரி 4-ந்தேதி சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருள்குமார் சென்றிருக்கிறார்.

அங்கு வட்ட வழங்கல் பிரிவு அலுவலர்  சுமதியிடம் தான் ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் ஸ்மார்ட் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்குமாறும் கேட்டிருக்கிறார். அதற்கு சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, ரூ.3 ஆயிரம் லஞ்சமாகப் பணம் கொடுத்தால் தான் ஒப்புதல் வழங்குவேன் என்று கூறினாராம்.

ஆனால், அந்த மனுதாரர் லஞ்சப் பணம் கொடுக்க விரும்பாத அருள்குமார், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுத் துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை ரேஷன் ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரரான அருள்குமாரிடம் கொடுத்து, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட வட்ட வழங்கல் பெண் அலுவலரிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், புகார்தார ஆன அருள்குமாருக்கு அறிவுறுத்தினர் அதன்படியே சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் செக்ஷனுக்கு சென்ற மனுதாரர் அருள்குமார்,

அதேநேரம் திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுத் துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவி காவல் ஆய்வாளர் மதன் மோகன், தலைமை காவலர் ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வெளியே மறைந்திருந்து காத்திருந்தனர்.

அவர்கள் கொடுத்து அனுப்பிய ரூ.3 ஆயிரத்தை, அருள்குமார், சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதியிடம் கொடுத்தார். அந்த ரசாயனம் தடவப்பட்ட லஞ்சப் பணத்தை வாங்கிய வட்ட வழங்கல் பெண் அதிகாரி டைரிக்குள் பணத்தை வைத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குச் நுழைந்து அவரை கையும், களவுமாக பிடித்து, வட்ட வழங்கல் அலுவலர் சுமதியை கைது செய்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட வட்ட வழங்கல் பெண் அலுவலக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். 

சமீபத்தில் கூட இதே தாலுகா அலுவலகத்தில் நில அளவைப் பிரிவு உள்ளது. இந்த அலுவலகத்தில் செய்யானந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி  ஹரிகிருஷ்ணன் தனக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா உட்பிரிவு செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். அந்த விவசாயியிடம் பட்டா மாறுதலுக்காக ரூபாய் 5000 லஞ்சம் கேட்ட பிற்கா நில அளவையர் தீனதயாளனை  கையும் களவுமாக பொறி வைத்து பிடித்த திட்டமிட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் அதற்கான அறிவுரைகளை ரசாயன பவுடர் தடவிய பணத்துடன் மனுதாரரிடம் புகார் தாரரிடம் கொடுத்து அனுப்ப அந்த லஞ்சப் பணத்தை பெற்ற நில அளவையர் தீனதயாளனை, லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் அங்கு பதுங்கியிருந்து அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...