Wednesday, 1 January 2025
காட்பாடி தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயம் ஆல்காட் நினைவாலயம் விருதம்பட்டில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த விருதம்பட்டு தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயம் ஆல் காட் நினைவாலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 11 மணிக்கு தொடங்கிய சிறப்பு வழிபாடு நள்ளிரவு 12 மணியை தொடர்ந்து 3 மணியளவில் நிறைவு பெற்றது. இந்த ஆல்காட் நினைவாலயத்தின் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த சிறப்பு வழிபாட்டில் சிறப்பித்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் ஆல்காட் நினைவாலயத்தின் தலைவரும் தலைமை ஆயருமான டி. எஸ். சி. மேனன் தலைமை வகித்து புத்தாண்டு சிறப்பு தகவல்களையும், வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் இறை மக்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை ஆயர் ஜெ. சாமுவேல் கம்பீரம், செயலர் என். கிறிஸ்டோபர் வேதக்கண், பொருளாளர் எம். ராஜன், பயிற்சி ஆயர் ஜி. ஏசு ராஜன் ஆகியோர் வெகு விமரிசையாக செய்திருந்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கேக் மற்றும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
பெரியகுளம் தீர்த்தத் தொட்டியை தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்!
தேனி மாவட்டம், பெரியகுளம் - சோத்துப் பாறை அணை செல்லும் வழியில் தீர்த்த தொட்டி அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் பெரியகுளம் மற்...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment