நடைபெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடியிலுள்ள துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று காலை 7 மணி முதலே அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நடுராத்திரி 1.20 மணியளவில் முடிவடைந்தது.
திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்ப்பாசனம் மற்றும் சுரங்கத் துறை மந்திரிமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் மூத்த மந்திரி துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனையை தொடங்கினர்.
துரைமுருகனுக்கு திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளிலும் நேற்று காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மந்திரி துரைமுருகன் சென்னையில் இருந்தார். எம்.பி கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இதனால், மந்திரி துரைமுருகனின் வீட்டில் மட்டும் சோதனை தொடங்காத நிலையில் மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது. இதனால், மந்திரி துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இதுதொடர்பாக கதிர் ஆனந்த் தரப்பிலிருந்து இ-மெயில் அனுப்பினால் அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படும் என திமுக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். காட்பாடி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வழக்கறிஞர் ஜிம் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர்ஆனந்த் தரப்பிலிருந்து அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சோதனை தொடர்பான ஆவணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு வன்னியராஜா, சுனில்குமாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளை திமுகவினர் சோதனை செய்த பிறகே வீட்டினுள் ரெய்டு நடத்த அனுமதித்தனர். சுமார் 7 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் பிற்பகல் 2 மணியளவில் சோதனையைத் தொடங்கினர்.
மந்திரி துரைமுருகன் வீட்டில் மத்திரியின் தனி அறை பூட்டியிருந்ததால் அந்த அறையின் சாவி இல்லாததால் இரண்டு கதவுகளின் பூட்டை உடைக்க, இரும்பு கடப்பாரை, உளி, சுத்தியல் போன்றவற்றை வீட்டினுள் கொண்டு சென்றனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. நள்ளிரவு 1.20 மணியளவில் சோதனை நிறைவடைந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.
முன்னதாக, இந்த ரெய்டு காரணமாக மந்திரி துரைமுருகன் வீட்டின் முன்பு திமுகவினர் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை பிரிவின் பெண் அதிகாரிகள் வைத்திருந்த ஹேண்ட்பேக்குகள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் திமுகவினர் சோதனை செய்து பார்த்தனர்.
No comments:
Post a Comment