Tuesday, 7 January 2025

சிவாஜி தயாரிப்பு நிறுவனம்: சந்திரமுகி படக்காட்சிகள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு நோட்டிஸ்..!!

தமிழ் திரைப்படமான சந்திரமுகி படத்தின் காட்சிகளை அனுமதி  இல்லாமல் பயன்படுத்தியதற்காக தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய நடிகை நயன்தாராவிடம் இருந்து ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்கவில்லை என சிவாஜி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடிகை நயன்தாரா, திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோக்கள் அடங்கிய ஆவணப்படம் இரு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் எனும் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த ஆவணப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் ரூ 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும், நெட்பிளிக்ஸும் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அது போல் தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தடை கோரும் மனு மீது ஜனவரி 8ஆம் தேதியான இன்று இறுதி விசாரணை நடைபெற இருக்கும் நிலையில்,

நடிகர் நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் சந்திரமுகி திரைப்படத்திலுள்ள 13 நொடி காட்சிகள் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக சிவாஜி புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் நடிகை நயன்தாராவுக்கும் நெட்பிளிக்ஸிற்கும் தலா ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் இதற்கு சிவாஜி தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. "நயன்தாராவுக்கு எதிராக எங்கள் நிறுவனம் சார்பில் எந்த புகாரையும் நாங்கள் அளிக்கவில்லை. அவருக்கு நோட்டீஸும் அனுப்பவில்லை. சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்த ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டோம். பிறகு எப்படி நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்புவோம்?" என கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த மறுப்பு கடிதத்துடன், சந்திரமுகி காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்திக் கொள்ள நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழையும் வெளியிட்டுள்ளது. அந்த சான்றில், நயன்தாராவின் ஆவணப்படத்தில் 13 நொடி வீடியோ காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அது போல் நெட்பிளிக்ஸ் தொடரில் அந்த சந்திரமுகி பட வீடியோவை பயன்படுத்துவதற்கு சிவாஜி தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப்படம் எடுத்ததிலிருந்தே நயன்தாராவுக்கு பிரச்சினை என அவருடைய ரசிகர்கள் வேதனையில் இருந்த நிலையில் சிவாஜி தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது.







No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...