Thursday, 2 January 2025

தமிழ்நாடு உள்ளாட்சித் துறையில் 9 மாவட்டங்களில் மறுசீரமைப்பு இல்லை?

தாம்பரம், வேலூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படாமல் போனது ஏன் என்ற கேள்வி அப்பகுதி மக்கள் இடையே எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளதா!?.

2019 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிலுள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், மாவட்ட மறுசீரமைப்பு செயல்முறை காரணமாக பின்வரும் 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை,

காஞ்சிபுரம்,

செங்கல்பட்டு ,

வேலூர் ,

திருப்பத்தூர் ,

ராணிப்பேட்டை ,

விழுப்புரம் ,

கள்ளக்குறிச்சி,

திருநெல்வேலி,

தென்காசி,

2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் ஜனவரி 5, 2025 அன்று காலாவதியாகின்றன. இந்த மாவட்டங்கள் அனைத்திலும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்புக்கான அரசாணைகளை (GO) தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

2019 இல் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட 9 மாவட்டங்களில், கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் பின்னர் அக்டோபர் 2021 இல் நடத்தப்பட்டன. இந்த பஞ்சாயத்துகள் அக்டோபர் 2026 வரை பதவியில் இருக்கும்.
இதனால், இந்த மாவட்டங்களிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் தற்போது விரிவாக்கம் செய்யப்படாது. உள்ளாட்சி தேர்தல் இந்த வருடம் நடக்க உள்ள நிலையில் இந்த 9 மாவட்டங்களிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளும் சேர்ந்து கலைக்கப்படும்.

அப்படி கலைக்கப்படும் சமயத்தில்.. அங்கு உள்ள உள்ளாட்சி , நகராட்சி, மாநகராட்சி, அமைப்புகள் விரிவாக்கம் செய்யப்படும். இதன் காரணமாகவே இந்த முறை தாம்பரம், வேலூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சித் துறையில் மாநகராட்சி விரிவாக்கம் தொடர்பாக  வெளியான அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி மதுரை. திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன். 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும்.

திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும். தனித்தும் கன்னியாகுமரி அரூர். பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு. காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும். 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தக்க சட்டவகைமுறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சியாக அமைந்துள்ள பகுதிகளை (contiguous areas) ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும்.

இடஞ்சார்ந்த திட்டமிடல் (spatial planning) உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்தல் / திறம்பட செயலாக்குதல் மூலம் திட்டமிடப்பட்ட நகர்ப்புர வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும். நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் அவர்களின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அரசு, நகரமயமாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், சீராண நகர்ப்புர வளர்ச்சி, செம்மையான நிருகாகம் ஆகியவற்றை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...