வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, நேதாஜி மைதானம், வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் அரசு துறைகளில் யாரும் நடத்திடாத வகையில் அனைவரையும் குடும்பத்துடன் வரவேற்று வரவைத்து பிரம்மாண்டமான முறையில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், ஐபிஎஸ்., தலைமையில் பொங்கல் விழாவானது நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமி, ஐஏஎஸ்., பங்கேற்று சிறப்பித்தனர். இதில் காவல்துறையினரும் குடும்பத்தினருடன் பங்கேற்று உற்சாகமாக பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கோஷங்களை எழுப்பி, பாரம்பரிய சிறப்பு பூஜைகள் செய்து மகிழ்ச்சியுடன் பொங்கலிட்டனர். மேலும், மியூசிக்கல் சேர், குதிரை சவாரி, சிலம்பாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகளுடன், குழந்தைகள் விளையாட ஸ்லைடர், பலூன் சுடுதல் போன்றவற்றையும், குடும்பத்துடன் வருகை புரிந்த அனைவருக்கும் வரவேற்பை சிறப்பிக்கும் வகையில், டீ, காபி, சமோசா, பொங்கல் என்றாலே சிறப்பு வாய்ந்த கரும்பு, ஐஸ்கிரீம், பானி பூரி, மசால் பூரி, பாப்கான், பஞ்சு மிட்டாய் என தனித்தனி அமைப்பில் பல்வேறு ஸ்டால்கள் அமைத்து இதுவரை அரசு துறைகளில் யாரும் நடத்திடாத வகையில் பிரம்மாண்டான முறையில் அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கி, உண்மையான மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து பத்திரிகை ஊடகங்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment