வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு குப்பைமேடு தரைக்காடு பகுதியில் கற்பகம் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனையாளராக பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்பவர் இருந்து வருகிறார்.
விற்பனையாளர் சரண்யா செய்யும் தில்லுமுல்லு வேலைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது என்று ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் அடுக்கடுக்கான புகார்களை சொல்லி வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஐந்து கிலோ முதல் ஏழு கிலோ எடையை குறைவாக போடச் சொல்லி தினக்கூலி பேக்கருக்கு மறைமுகமாக கூறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதைப்போல மண்ணெண்ணை வழங்குவதிலும், பருப்பு பாமாயில் சமையல் எண்ணை வழங்குவதிலும் பல்வேறு முறைகேடுகளை செய்து குடும்ப அட்டைதாரர்கள் வயிற்றில் அடித்து விட்டு மாதம் மாதம் சரண்யா பல ஆயிரங்களை குவித்து சம்பாதித்து வருவதாகவும் தகவல்கள் நுகர்வோர் மற்றும் சமூக அலுவலர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இனியும் விற்பனையாளர் சரண்யா குடும்ப அட்டைதாரர்கள் வயிற்றில் அடித்தால் சரண்யாவை கடவுளே மன்னிக்க மாட்டார் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த நுகர்வோர். அத்துடன் இதுதான் இங்கு நடக்கும் உண்மையும்கூட என்று அடித்து கூறுகின்றனர். இவ்வாறு ஏழைகள் வயிற்றில் அடித்து தனது வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வேலையை கனகச்சிதமாக செய்து வருகிறார் அரசின் நியாய விலை கடை விற்பனையாளர் சரண்யா என்று சொன்னால் அது மிகையாகாது அரசாங்கம் ஊரில் உள்ளவர்களுக்கு வழங்க சொல்லிக் கொடுப்பதை இவர் தனக்கு என்று கருதி சுருட்டி கொள்வதை நீண்ட காலமாக வழக்கமாக வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இது குறித்து வேலூரிலுள்ள கற்பகம் கூட்டுறவு மேலாளர் நேரில் வந்து களஆய்வு செய்தால் உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறுகின்றனர் அப்பகுதி வாழ் மக்கள். அதுமட்டுமின்றி அரசின் நியாய விலை கடை விற்பனையாளர் சரண்யா பிரபல அரிசி கடத்தல்காரர்களான யூசுப், திரு.வி. க.நகர் நேரு, குல்ஜியார் அகமத், ஆகியோர்களுக்கு விற்பனையாளர் சரண்யா ரேஷன் பொருட்களை மேற்கண்ட நபர்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை கள்ளத்தனமாகவும், அதிக லாபத்திற்காகவும் விற்பனை செய்வதை மக்கள் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இனி மாவட்ட நிர்வாகம் சரண்யா மீது எவ்வகையான விசாரணையோ அல்லது துறை ரீதியான விசாரணையையோ நடத்த ஆயத்தமாக போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment