Thursday, 9 January 2025

வேலூரில் போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!!

வேலூர் மாவட்டம், வேலூரில், வேலூர் கோட்ட போக்குவரத்து துறை மற்றும் தீயணைப்பு துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு மாதம் மாதம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு, வேலூர் வட்டார போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் தலைமையில் நடத்தப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வேலூர் நிலைய அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என பலர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் சாலைகளில் வாகனத்தில் தீப்பிடித்தால் சாதாரணமாக எப்படி அணைப்பது? உள்ளே உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், இதனை தொடர்ந்து பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த அறிய அவர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை விதிகள் மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டிய சிக்னல்கள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் ஆஜரானார்!

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான வீடு, கல்லூரியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்திய நிலையில், இன்று, கதிர...