Wednesday, 1 January 2025

பாகிஸ்தான் அகதி டூ இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.. அப்படி என்ன செய்தார்?

இந்தியா 1991இல் திவாலாக இருந்த நிலையில், அதை மீட்டு நாட்டை வல்லரசாக மாற்ற புதிய பாதையை வகுத்துக் கொடுத்தவர் மன்மோகன் சிங் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்தியப் பிரதமர் நரசிம்ம ராவுக்கு அடுத்து அதிகம் பேசாத பிரதமர் என்ற பெயரை எடுத்தவர் மன்மோகன் சிங். உலகமே வியந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் எனப் பட்டியலில் இடம்பெற்றவர். பலரும் பொறியியல், மருத்துவம் என மோகம் கொண்டிருந்த காலத்தில் பொருளாதாரம் சார்ந்த படிப்புகள் மீது இளைஞர்களின் கவனத்தைத் திசை திருப்பி விட்டவர்.

உதாரணமாகச் சொன்னால் பங்குச் சந்தை நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முதலில் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் படித்தார் ஆனால், மன்மோகன் சிங் ஏற்படுத்திய தக்கத்தால் அந்தப் படிப்பைவிட்டுவிட்டு பொருளாதாரம் படிக்கப் புறப்பட்டார். இப்படி இவர் மட்டும் இல்லை; இந்தியாவில் பல ஆயிரக் கணக்கான இளைஞர்களைப் பொருளாதாரம் பற்றிய படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டியவர் மன்மோகன் சிங்.

சோஷியலிஸம் மற்றும் கம்யூனிசம் தவிர மூன்றாவதாக ஒரு உலகம் இருக்கிறது என்பது புரியவைத்தர் மன்மோகன் சிங். மிக வறுமையான பின் தங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர். பின்னர் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி வரை போய் உயர்கல்வி பயின்றவர். மின் விளக்கு வசதிகூட இல்லாத வீட்டில் படித்து உலக அளவில் கவனிக்கப்படும் பொருளாதார அறிஞராக வலம் வந்தவர். இன்னும் சொல்லப் போனால் 15 வயதில்தான் ஷூ போடும் வசதியே அவருக்குக் கிடைத்தது.

இஸ்லாமாபாத் பக்கம் 80 கிமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில்தான் அவர் பள்ளிப் படிப்பை முடித்தார். இந்த பகுதி இன்றைக்குப் பாகிஸ்தானிடம் இருக்கிறது. நாடு பிரிவினையின் போது இவரது குடும்பத்தில் சிலரை அவர் இழந்தார்.

ஆகவே மன்மோகன் 10 ஆம் வகுப்பு வரை அவர் உருது மொழியில்தான் கல்வி கற்றார்.ஆகவேதான், அவரது பல உரைகளில் இக்பால் போன்ற கவிஞர்களின் வரிகளை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது மறைவை அடுத்து அவர் சுஷ்மா சுவராஜுக்கு கவிதையில் பதிலளித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நாடு பிரிவினையின் போது அவர் அகதி முகாமுக்கு குடியேறி10 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை தங்கிப் படித்தார். அவருக்கு டாக்டர் படிக்க சீட் கிடைத்தது. அதைத் தவிர்த்துவிட்டு பொருளாதாரம் படித்தார். இவர் பிரதமர் ஆன பிறகும் அவரது சொந்த கிராமமான 'கா’வுக்கு மின்சார வசதியே வரவில்லை. அதனால் அன்றைய பாகிஸ்தான் பிரதமர் முஷரப் இடம் அனுமதி பெற்று சூரிய மின் விளக்குகளை அங்கு அமைத்துக் கொடுத்தார்.

பிரபல எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் மூலம் மன்மோகனுக்கு நேரு அறிமுகம் கிடைத்தது. அவர் அப்போது பஞ்சப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தார். நேரு தன்னோடு வரும்படி அழைத்தும் அவர் செல்லவில்லை. பேராசிரியராகவே பணியைத் தொடர்ந்தார்.

ஐநாவின் வேலைக் கிடைத்த பின்னர் இந்தியாவின் பற்றுக் காரணமாக டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் வேலையை ஏற்று நாடு திரும்பினார். அடுத்து மன்மோகனுக்குப் பிரதமரின் அமைச்சரவையில் ஆலோசகராக இணைந்தார். மிகப் பெரிய மாற்றமாக ரிசர்வ் பேங் கவர்னரானார். பின் திட்டக்குழுவின் தலைவராக அமர்ந்தார்.

இந்தியா 1991இல் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டபோதுதான் இவரது உதவியைக் காங்கிரஸ் நாடியது. இவரை நிதியமைச்சராக்கியது. இவர் பதவி ஏற்கும்போது ஏற்றுமதி செய்வதற்கான 15 நாட்கள் நிதிதான் கஜானாவிலிருந்தது.

அதை எல்லாம் சரி செய்ய உலகப் பொருளாதார சந்தையை திறந்துவிட்டார். தனியார் டிவி அனுமதி அளிக்கப்பட்டது அவரது ஆட்சிக் காலத்தில்தான். டிவி, கம்ப்யூட்டர், கேமிரா என அனைத்து பொருள்களையும் இறக்குமதி செய்ய கடும் விதிமுறைகள் இருந்தன. கட்டுப்பாடுகள் இருந்தன. அதேபோல் தொலைபேசி, கேஸ் சிலிண்டர் பெற வேண்டும் எனில் பல வருடங்கள் காத்திருக்கும் நிலை இருந்தது. தட்டுப்பாடு நிலவிய காலம். அதைத் தளர்த்தியவர் மன்மோகன் தான்.

மன்மோகன் பிரதமராக அமர்ந்த பின் கடன் கொடுப்பவர் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் ஒழுங்குமுறை நீக்கினார். இதனால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வட்டிக்கு வேண்டுமானாலும் கடன் கொடுக்கலாம் என்ற முறை ஒழிக்கப்பட்டது. மேலும் புதிய தனியார் வங்கி உரிமங்கள் வழங்கப்பட்டன.

அதுவரை நிதியா மிருகங்களின் தோல் மூலம் தயாரிக்கப்படும் ஷூ, பேக் ஆடை ஆகியவற்றை மட்டுமே ஏற்றுமதி செய்து வந்தது. உலக சந்தையை திறந்துவிட்டதால் பல நிறுவனங்கள் இந்தியாவில் கம்பெனியை தொடங்கினர். இன்று எலக்ட்ரானிக்ஸ், கார் உற்பத்தி எனப் பல துறைகளில் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. அந்தக் கதவைத் திறந்து வைத்தவர் மன்மோகன்.

அடுத்ததாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம் என்பதைக் கொண்டுவந்தார். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதல் முறையாக இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். சந்தை ஒழுங்குமுறை நிறுவனமான செபிக்கு மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்த அதிக அதிகாரங்கள் வழங்கினார். அதில் மாற்றங்களைச் செய்தார்.

இவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில் தான் அதாவது ஏப்ரல் 1991 இல், கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 டன் தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் யூனியன் பாங்க் ஆஃப் சுவிட்சர்லாந்திலிருந்து (UBS) இந்திய அரசாங்கம் 200 மில்லியன் டாலரை திரட்டியது. அதனால் நாட்டின் பொருளாதாரத்தைச் சீராக்கினார்.






No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...