Tuesday, 7 January 2025
பேரணாம்பட்டில் காட்டன் சூதாட்டத்தை முற்றிலும் ஒழித்த காவல் ஆய்வாளருக்கு , பொதுமக்கள் பாராட்டு..!!!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் பல வருடங்களாக காட்டன் சூதாட்டம் நடைபெற்று வந்தது. குறிப்பாக தரைக்காடு பகுதியில் கடை வைத்து காட்டன் சூதாட்டம் நடத்தினர். இந்த காட்டன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டு ஒரு சில மனைவிமார்கள் கணவனை விட்டு பிரிந்து சென்றார்கள். வேலைக்கு போகும் ஆண்கள் வாங்கி வரும் கூலியை பெரும்பாலானவர்கள் காட்டன் சூதாட்டத்தில் பணத்தை எல்லாம் இழந்துவிட்டு வெறுமனே வீட்டுக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையிலான போலீசார் காட்டன் சூதாட்டத்தை மிகவும் அரும்பாடுபட்டு இரவு பகல் பாராது அயராது உழைத்து நிரந்தரமாக ஒழித்து விட்டார்கள். இதனால் பேரணாம்பட்டு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பேரணாம்பட்டில் காட்டன் சூதாட்டம் ஒழிக்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது ஆண்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை அப்படியே மனைவியிடம் கொண்டு நன்றாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பேரணாம்பட்டு பொதுமக்கள் காவலர்களை கருணையின் நிறம் காக்கி என்று மனம் குளிர பாராட்டி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
பக்தர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல விடாமல். தடுக்கும் தனிநபர்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செல்வபெருமாள் கோயில் நகர் பகுதி மக்கள் சித்தூர் ரோடு புதிய மேம்பாலம் அருகில் மாரியம்மன் கோயி...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment