Friday, 17 January 2025

குடியாத்தம் புதிய நீதி கட்சி சார்பில் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாளில் அன்னதானம் விநியோகம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய நீதி கட்சி சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், நிறுவனருமான டாக்டர் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியிலுள்ள அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு இடைவிடாது நடந்தது. அத்துடன் சகஸ்ரநாம சிறப்பு  பூஜைகளும், பஜனைகளும் நடந்தது.  குடியாத்தம் பிச்சனூர், அரசமரம், எம்ஜிஆர் சிலை அருகில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடைவிடாது ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதை ஏழை, எளியவர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், சாலையோரம் வசிக்கும் ஏழைகள் வாங்கி உண்டு மகிழ்ந்தனர். இதற்கு முன்னதாக அருகில் இருந்த எம்ஜிஆரின் மார்பளவு திருவருவுச்சிலைக்கு குடியாத்தம் புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளர் எஸ். ரமேஷ் மற்றும் மாவட்டத் தலைவர் ஆர். இளஞ்செழியன், மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராம. இளங்கோ, ஒன்றிய தலைவர்  குமரவேல் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...