தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல்கள்.. திருவண்ணாமலை, பெரம்பலூர் என தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் லஞ்ச லாவண்யங்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகின்றன.. இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கைதாகி வருவது பொதுமக்களுக்கு கவலையை தந்து வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு துறை உள்ளது. இதில், சில பெண் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி கைதாகி கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்புகூட, ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில், விருதுநகர் விஏஓவுக்கு, நீதிமன்றம் சரியான தண்டனையை தந்துள்ளது.. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் 2 சர்வேயர்கள் லஞ்ச புகாரில் கைதாகி இருக்கிறார்கள்.
அதாவது, மேல்மலையனுார் தாலுகா மேல்வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை அளவீடு செய்ய அணுகியபோது, மேல்மலையனுார் தாலுகா அலுவலக சர்வேயர்கள், இடைத்தரகர் மூலம் 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்களாம். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்து, 2 அதிகாரிகளுமே கைதானார்கள்.
அதேநாளில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்ஊழியர் கைதானார்.. தெருவிளக்கு அமைக்க மின் கம்பங்கள் நட்டு, மின் இணைப்பு பெறவேண்டி, ஆன்லைனில் மின்வாரிய சேத்துப்பட்டு நிர்வாக பொறியாளருக்கு ராமகிருஷ்ணன் என்பவர் விண்ணப்பித்திருக்கிறார்.
இந்த இணைப்பு சம்பந்தமாக சேத்துப்பட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர் சிவப்பிரகாசத்திடம் அணுகி விசாரித்தற்கு 6 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார். இறுதியில் மின்ஊழியர் கைதானார்.
கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில், சுமதி என்ற பெண் அதிகாரி லஞ்ச புகாரில் சிக்கியிருந்தார். அதாவது, அருள்குமார் என்பவர், புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு பிறகு, வட்ட வழங்கல் அலுவலர் சுமதியிடம் அணுகி, புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுக்கு ஒப்புதல் வழங்குமாறும் கேட்டாராம்.. அதற்கு சுமதி, ரூ.3 ஆயிரம் தந்தால்தான் ஒப்புதல் வழங்குவேன் என்று கறாராக கேட்டிருக்கிறார்.
கடைசியில் இவரை பற்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் அருள்குமார் புகார் தரவும், இறுதியில் கையும் களவுமாக சிக்கினார் சுமதி.. வரும் 31ம் தேதியுடன் சுமதி பணிநிறைவு பெறவிருந்தாராம்.. ஆனால், அதற்குள் இப்படியொரு புகாரில் சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்.
அதேபோல, திருவண்ணாமலையில் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் தி.மலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சாரோன் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் ஏஎல்சி பள்ளி நிர்வாகம் நியமித்த ஆசிரியையை அங்கீகரிக்க, துணை ஆய்வாளர் தனது மனைவியின் வங்கி கணக்கு மூலமாக லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த லஞ்ச புகார்கள் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஆந்திர மாநில எல்லையில், லஞ்சம் வாங்கிய போக்குவரத்து அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியரிடம் லஞ்சம் கேட்டு வாங்கியதாக தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநரை மாநில ஊழல் தடுப்புப் பணியகத்தின் (ஏசிபி) புனே பிரிவு கைது செய்துள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எழுத்தரிடம் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தாததற்காகவும், அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யவும், துணை இயக்குனர் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டாராம்.. தனியார் டிராவல்ஸ் அலுவலகம் முன்பு, இந்த லஞ்சப் பணத்தை வாங்கும்போது ஏசிபி போலீஸார் பொறி வைத்து பிடித்துள்ளது, மிகுந்த பரபரப்பை தற்போது ஏற்படுத்தி வருகிறது.
No comments:
Post a Comment