Thursday, 16 January 2025

ரூ.12.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமவளத்துறை உதவி இயக்குனர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடி கைது!

நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனராக இருப்பவர் வள்ளல் (54 வயது). கோவையைச் சேர்ந்த இவர், நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்குவாரி உரிமையாளர்களிடம் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கோவைக்கு புறப்பட இருந்தார். இது குறித்து தகவலறிந்த நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி மற்றும் போலீசார், கல்குவாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய புவியியல் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளலை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து கட்டுகட்டாக ரூ.12.5 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கணக்கில் வராத, ரூ. 12.50 லட்சத்தை, காரில் எடுத்து சென்ற நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளலிடம் இருந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் வள்ளல் (54 வயது). நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கல் மற்றும் மண் குவாரிகள் உள்ளன.

அதன் உரிமையாளர்களிடம் இருந்து, உதவி இயக்குனர் வள்ளல், வாரம் தோறும் குறிப்பிட்ட தொகையை மாமூலாக வசூல் செய்வதாகவும், தற்போது, பொங்கல் பண்டிகையைய்யொட்டி, அதிக அளவில் வசூல் செய்துள்ள பணத்தை எடுத்துக் கொண்டு, தனது சொந்த ஊரான கோவைக்கு காரில் செல்வதாகவும், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

அதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையில், காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், 14.01.2025 அன்று இரவு 7 மணிக்கு, நாமக்கல் – திருச்செங்கோடு ரோட்டில், நல்லிபாளையம் போலீஸ் செக்போஸ்ட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக, நாமக்கல்லில் இருந்து கோவைக்கு சென்ற நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலின் காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் ஒரு பையில் ரூ. 12.50 லட்சம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து, அவரிடம் விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அதையடுத்து, அவர் வைத்திருந்த கணக்கில் வராத, ரூ. 12.50 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

பக்தர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல விடாமல். தடுக்கும் தனிநபர்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செல்வபெருமாள் கோயில் நகர் பகுதி மக்கள் சித்தூர் ரோடு புதிய மேம்பாலம் அருகில் மாரியம்மன் கோயி...