மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது தமிழ்நாடு வருவாய்த்துறை நிர்வாகத்தில் அடிப்படைச் சேவைகளில் மக்கள் குறைகளைச் சந்திக்கும்போது, உரிய அலுவலர்களை அணுகிக் குறைகளைத் தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதனையடுத்து, வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, ஆட்சியாளர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள் முகாமில் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலெட்சுமி, ஐஏஎஸ்., அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தார்.
No comments:
Post a Comment