Friday, 10 January 2025

மேல்மலையனூரில் விவசாயின் நிலத்தை அளவிட செய்து தர ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் உட்பட 3 பேர் கைது!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் விவசாய நிலத்தை அளவீடு செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நில அளவையர் உள்பட 3 பேரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசார் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்துள்ளனர்.

மேல்மலையனூர் வட்டம், மேல்வைலாமூரைச் சேர்ந்தவர் குமார். விவசாயியான இவர், தனக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக, மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள தலைமை நில அளவையர் தங்கராஜிடம் (37 வயது) அண்மையில் மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட தங்கராஜ், நிலத்தை அளக்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து குமார் தனது மருமகனான திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணிக்கத்திடம் தெரிவித்த நிலையில், அவா் விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தார்.

அவா்களின் அறிவுரைப்படி, மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று பணியிலிருந்த நில அளவையர் தங்கராஜிடம் ரசாயனம் தடவிய ரூ.9 ஆயிரத்தை மாணிக்கம் கொடுக்க முயன்றபோது, அவர் உரிமம் பெற்ற நில அளவையா் பாரதியிடம் கொடுக்குமாறு கூறினாராம். ஆனால், பாரதி இடைத்தரகர் சரத்குமாரிடம் பணத்தை வழங்குமாறு தெரிவித்தாராம்.

சரத்குமாரிடம் மாணிக்கம் ரூ.9 ஆயிரத்தை வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் பணத்தை பறிமுதல் செய்து, நில அளவையர் தங்கராஜ் உள்பட மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.









No comments:

Post a Comment

பெரியகுளம் தீர்த்தத் தொட்டியை தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் - சோத்துப் பாறை அணை செல்லும் வழியில் தீர்த்த தொட்டி அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் பெரியகுளம் மற்...