Thursday, 9 January 2025

ஓசியில் பைக் சர்வீஸ் செய்யாத மெக்கானிக்கை தாக்கியதுடன் கஞ்சா வழக்கைப் பதிவு செய்திடுவேன் என மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து ஐஜி உத்தரவு!

மதுரை மாவட்டம், பாலமேடு போலீஸ் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் அண்ணாதுரை என்பவர் வாடிப்பட்டியில் பைக் ஒர்க்‌ஷாப் வைத்துள்ள திண்டுக்கலைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் தனது இருசக்கர வாகனத்தை பழுது பார்க்குமாறு கூறினார். ஆனால் மெக்கானிக் சீனிவாசன் போனை எடுத்து பேசாததால், அவரை உதவி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தாக்கினார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து உதவி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம், பாலமேடு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக அண்ணாத்துரை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வாடிப்பட்டியில் இருசக்கர வாகன ஒர்க்‌ஷாப் வைத்துள்ள திண்டுக்கல் மாவட்டம், மட்டப்பாறையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 31வயது) என்பவரிடம் தனது இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கச்சொல்லி கொண்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் உதவி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை போன் செய்தும் அதனை மெக்கானிக் சீனிவாசன் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உதவி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை வாடிப்பட்டியிலுள்ள ஒர்க்‌ஷாப்க்கு வந்து மெக்கானிக் சீனிவாசன் மற்றும் கடை ஊழியரை கன்னத்தில் பளார்னு அறைந்து தாக்கியிருந்தார். இது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இதனையடுத்து மெக்கானிக் சீனிவாசன் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்திடம் புகார் அளித்தார். அதில், "வாடிப்பட்டியில் பணியில் இருந்தபோது, உதவி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ஏற்கனவே வாகனம் பழுதுபார்த்த வகையில் ரூ.8,600 பாக்கி வைத்திருக்கிறார்.


தற்போது மீண்டும் பணம் ஏதும் தராமல் இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கச் சொல்லி மிரட்டினார். போலீஸ்காரர் ஒருவருடன் வந்து கடை ஊழியரையும் தாக்கி கஞ்சா உள்ளிட்ட திருட்டு வழக்குகளைப் பதிவு செய்வதாகவும் என்னை மிரட்டினார்" என அதில் தெரிவித்துள்ளார். இதனிடையே சீனிவாசனை அண்ணாதுரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியதை அடுத்து, உதவி காவல் ஆய்வாளர் அண்ணாதுரையை பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, ஐஏஎஸ்., உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...