Tuesday, 14 January 2025

தர்மபுரி அரசு பள்ளிக்கூடத்தில் கழிவறையே சுத்தம் செய்த பழங்குடி மாணவிகள்.. தலைமையாசிரியை கலைவாணி சஸ்பெண்ட்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள அரசு பள்ளியில் பழங்குடியின மாணவிகளை வைத்து கழிவறை சுத்தம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெருங்காடு மலைக்கிராமம் உள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை உள்ளது.

பள்ளியில் தலைமையாசிரியையாக கலைவாணி என்பவர் பணியாற்றினார். இவருடன் 5 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர்.
மலைக்கிராமம் உள்பட பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. வீடியோவில், யூனிபார்ம் அணிந்த 3 மாணவிகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மாணவிகள் கையில் துடைப்பம் வைத்து காலில் செருப்பு அணியாமல் சுத்தம் செய்தனர்.

இந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த மாணவிகள் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வீடியோவை பார்த்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளிக்கு படிக்க வரும் மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதா? சம்பந்தப்ட்ட ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்தனர்.

அதேபோல் மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி ஆசிரியைகள் தான் மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வற்புறுத்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அப்போது பள்ளி நிர்வாகம் மீது தான் தவறு இருப்பது தெரியவந்தது. அதோடு கழிவறையை சுத்தம் செய்ய மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியை கலைவாணியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.






No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...