Monday, 6 January 2025

குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் கல்லூரி மாணவன் மீது வழக்குப் பதிந்து அவரது கல்வியை பாழாக்கிய காவல் ஆய்வாளர் சாந்தி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா கீழ் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயின் மகன் கல்லூரி மாணவன். தந்தை இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்தக் கல்லூரி மாணவன் தனது கல்வி கட்டணம் செலுத்தவும், தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளவும் விடுமுறை நாட்களில் இப்படி மணல் அள்ள தந்தையுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தந்தையுடன் மகன் விடுமுறை நாட்களில் ஆற்று மணல் அள்ளச் செல்வது வழக்கம். இந்நிலையில் அப்படி இருசக்கர வாகனத்தில் மணல் அள்ள தந்தையுடன் மகனும் சென்றுள்ளார். அப்போது குடியாத்தம் தாலுகா காவல் ஆய்வாளர் சாந்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தந்தையும் மகனும் குடியாத்தம் தாலுகா காவல் ஆய்வாளர் சாந்தியிடம் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளார். அப்போது தந்தை மற்றும் அந்த ஊரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அவன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் அவன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் அவனை விட்டு விடுங்கள் தந்தை மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து கொள்ளுங்கள் என்று எடுத்துக் கூறினர். இருந்தாலும் கடமையிலிருந்து சற்றும் விலகாத காவல் ஆய்வாளர் சாந்தி கல்லூரி மாணவனை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தார். இதையடுத்து இந்த தகவல் தெரிந்ததும் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவனை நிரந்தரமாக நீக்கம் செய்து அவனுக்கு மாற்றுச் சான்றிதழ் அளித்து வீட்டிற்கு அனுப்பி விட்டது . இதனால் அந்த மாணவன் தனது கல்வியை இழந்து இன்று சுற்றித் திரிந்து வருகிறான். இப்படி கடமையை தவறாது செய்வது போல வெளியில் காட்டிக் கொண்டார். இந்த அமைதிக்கு பெயர் தான் சாந்தி. அத்துடன் இவர் தாலுகா காவல் நிலையத்துக்கு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றதிலிருந்து மணல் வண்டிகளுக்கு வாரம் ரூபாய் ஐந்தாயிரம், டிப்பர் லாரிகளுக்கு வாரம் ரூபாய் 10 ஆயிரம்,  டாரஸ் லாரிகளுக்கு ரூபாய் 20000 என்று ஒவ்வொரு வாகனங்களுக்கும் தரம் பிரித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார். இருசக்கர வாகனங்களுக்கு தலா ரூபாய் 2000 என வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இவருக்கு செலுத்தி விட வேண்டும். இது எழுதப்படாத சட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

எந்த வாகனங்களுக்கு பணம் செலுத்தவில்லையோ அந்த வாகனம் மற்றும் வாகனத்தின் உரிமையாளரை கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்து ஈவு இறக்கமின்றி சிறைக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த கடமை தவறாத பெண் ஆய்வாளர். அத்துடன் யார் இவரிடம் பேசினாலும் இவர் தனது போலீஸ் வாகனத்தில் இருந்து கீழே இறங்காமல் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அத்துடன் காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்கவோ விசாரணைக்கு வருபவர்களையோ கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து உரக்கப் பேசு சாப்பிட வில்லையா என்று அவர்களை அதட்டுவது ஒருமையில் பேசுவது திட்டுவது விரட்டுவது என்று பணியை தொடர்ந்து வழக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் இந்த சாந்தி. இவர் பெயரில் தான் சாந்தி உள்ளது. செயல்களில் கொடூரமும், தான் தோன்றித்தனமும் தான் என்று மனதை கொண்டு செயல்படுவதாக பொதுமக்கள் சொல்லி சொல்லி ஆதங்கப்படுகின்றனர். இது காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை. தனிப்பிரிவு தலைமை காவலர்கள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு ஆய்வாளர்கள் என யாரும் இவர் மீது புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோருக்கு அனுப்பினார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே குடியாத்தம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் பொது மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. அத்துடன் 50 ஊராட்சிகளை இந்த காவல் நிலைய எல்லைக்குள் வைத்துக்கொண்டு என்னென்ன சமூக விரோத செயல்கள் உள்ளதோ அவற்றையெல்லாம் பயன்படுத்தி இவர் அதை வருமானமாக பெருக்கி தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இப்படி இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் ஓராண்டிற்குள்ளாக குவியத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இவர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த காவல் நிலையத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த பகுதி வாழ் மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாக கோரிக்கையாக மாறியுள்ளது . இதற்காக அவர்களும் திடீர் போர்க்கொடித் தூக்க ஆரம்பித்து விட்டனர் என்பதே குறிப்பிடத்தக்கது. அதற்குள் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜூவால். ஐபிஎஸ்., ஆகியோர் முந்திக்கொண்டு இவர் மீது துறை ரீதியான விசாரணையை நடத்தி இவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். பொதுமக்களுக்காக அரசா அல்லது அரசுக்காக பொதுமக்களா என்பது புலப்படாத நிலையில் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி போன்ற அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்ய எப்போதுமே முன்வர மாட்டார்கள் என்கின்றனர் குடியாத்தம் பகுதி பொதுமக்கள். ஆதலால் இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க இருக்கின்றனர் மற்றும் காவல்துறை  தலைவர் சங்கர் ஜூவால் சாட்டையை சாந்தி மீது சுழற்றுவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...