Wednesday, 1 January 2025

ஓசூர் மாநகரில் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஷோரூமை நடிகை ஸ்ரீலீலா திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகரில் இந்தியாவின் முன்னணி மற்றும் நம்பகமான நகை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான கல்யாண் ஜுவல்லர்ஸ், ஓசூர், கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் தனது புதிய ஷோரூமை திறந்துள்ளது.இந்த புதிய ஷோரூமை நடிகை ஸ்ரீலீலா திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினர். புதிய ஷோரூமில் கல்யாண் ஜுவல்லர்ஸின் பல்வேறு கலெக்ஷன்களில் உள்ள நகைகள் பரவலாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

விழாவில் பேசிய நடிகை ஸ்ரீலீலா, “இந்த புதிய கல்யாண் ஜுவல்லர்ஸ் ஷோரூமின் தொடக்க நிகழ்வில் பங்கேற்க முடிவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நம்பிக்கை, வெளிப்படைத் தன்மை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் ஆழமான மதிப்பைக் கொண்டிருக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸின் பிராண்ட் முகமாக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.
புதிய ஷோரூம் பற்றி கருத்து தெரிவித்தகல்யாண் ஜுவல்லர்ஸ் இயக்குநர் ரமேஷ் கல்யாணராமன்,
“ஓசூரில் புதிய வடிவமைக்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் ஷோரூமை துவங்கியதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் முழுமையான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். உலகத் தரமன அனுபவத்தை வழங்குவதோடு, நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மை போன்ற பிராண்டின் முக்கியமான மையக் குணாதிசயங்களை எப்போதும் கடைபிடிக்க கடமைப்பட்டுள்ளோம்.
உயர்தர சேவையுடன், பரந்த மற்றும் தனித்துவமான நகை வடிவமைப்புகளை தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று கூறினார்.
ஓசூர் ஷோரூமில் வாடிக்கையாளர்களுக்கான பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. சீரான தங்க நகைகளின் மேக்கிங் சார்ஜில் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆன்டிக் நகைகளில் மற்றும் பிரீமியம் தயாரிப்புகளில் மேக்கிங் சார்ஜில் 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. கோவில்சார் நகைகளுக்கு மேக்கிங் சார்ஜில் 25% தள்ளுபடி கிடைக்கும். 30 கிராம்களுக்கு குறைவான எடை கொண்ட அனைத்து நகைகளுக்கும் மேக்கிங் சார்ஜில் 25% தள்ளுபடி வழங்கப்படும், என்று கல்யாண் ஜூவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

பக்தர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல விடாமல். தடுக்கும் தனிநபர்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செல்வபெருமாள் கோயில் நகர் பகுதி மக்கள் சித்தூர் ரோடு புதிய மேம்பாலம் அருகில் மாரியம்மன் கோயி...