Tuesday, 7 January 2025
பேரணாம்பட்டு அரிமா சங்கம் சார்பில் அரசு பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி..!!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பெரியதாமல் செருவு அரசு நடுநிலைப் பள்ளிக்கு பேரணாம்பட்டு அரிமா சங்கம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (ஆர்ஒ) வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் ஆர்.சாவித்திரி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் இ.ஹரிஹரன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஆசிரியர் வி.செல்வராஜ், ஆசிரியை கே.மான்விழி, அரிமா சங்க உடனடி முன்னாள் தலைவர் டாக்டர் பிலால் நத்தார், இயக்குநர் ஜெ.தமிழரசன், செயல் பொருளாளர் கே.பிச்சை முத்து, முதல் துணை தலைவர் முஹம்மத் இம்ரான், துணைச் செயலாளர் பல்லலகுப்பம் கே.மனோஜ்குமார், சேவை தலைவர் ஏ.சுபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேர்ணாம்பட்டு அரிமா சங்க தலைவர் கோ.பரிதா புருஷோத்தமன் 195 பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். இந்நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள் ஜெ.சக்தி, ஜி.நந்தினி, கணினி ஆசிரியை ஷாலினி, அரிமா சங்க நிர்வாகிகள் பாடகர் குமார், முகாம் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, மக்கள் மற்றும் செய்தி தொடர்பு கே.அரவிந்த், சம்பத் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!
நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment