Friday, 10 January 2025

காட்பாடி ஸ்ரீ முத்துமாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!

வேலூர் மாவட்டம் , காட்பாடி தாராபடவேடு பவானி நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுயம்புவாக உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில் மார்கழி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராகு காலமான 10.30 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் சிறப்பு பூஜை நடத்தி சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த ராகு கால பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புளியோதரை, சுண்டல் பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

No comments:

Post a Comment

பக்தர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல விடாமல். தடுக்கும் தனிநபர்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செல்வபெருமாள் கோயில் நகர் பகுதி மக்கள் சித்தூர் ரோடு புதிய மேம்பாலம் அருகில் மாரியம்மன் கோயி...