Wednesday, 22 January 2025

பக்தர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல விடாமல். தடுக்கும் தனிநபர்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செல்வபெருமாள் கோயில் நகர் பகுதி மக்கள் சித்தூர் ரோடு புதிய மேம்பாலம் அருகில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அதாவது 7 அடி உயரம் கொண்ட புற்று கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இடம் அரசுக்கு சொந்தமான இடத்தில்  அமைந்துள்ளது. இந்த கோயிலில் தினந்தோறும் அப்பகுதி பொதுமக்கள் புற்றுக்கு பால் ஊற்றி பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள். 

இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த எம். செல்வம் மனைவி எஸ்.வசந்தி அத்துமீறி முள்வேலி அமைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் உள்ளே வராதபடி முள்வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தி அடைத்து விட்டார். 

இதைப் பொதுமக்கள் தட்டிக்கேட்டதற்கு இங்கு யாரும் உள்ளே வரக்கூடாது. இந்த இடம் அனைத்தும் எனக்கு சொந்தம் இடம் என்று கூறி பொதுமக்களை மிரட்டி வருகிறார். இது குறித்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா விடம் மனுவாக எழுதி கொடுத்துள்ளனர். 

மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவிலுக்குள்ளே செல்ல விடாமல் தடுக்கும் இந்த தலைநகர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து கோயில் நிலத்தை மீட்டு பொதுமக்கள் நிம்மதியாக வழிபாடு நடத்த ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளையும், மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளனர் பக்தர்களும், பொதுமக்களும். இனி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...