Monday, 6 January 2025

தானப் பத்திரம்.. பிள்ளைகள் கவனிக்கவில்லை என்றால் சொத்து பத்திரத்தை பெற்றோர் ரத்து செய்யலாம்!

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு தானமாக எழுதி தந்த சொத்துக்களை, மீண்டும் பெற்றோர்கள் திரும்ப பெற முடியுமா? தான செட்டில்மென்ட் செய்த பிறகு, அந்த சொத்துக்களில் , பெற்றோருக்கு மீண்டும் உரிமை உள்ளதா? உச்சநீதிமன்றம் இதுகுறித்து முக்கிய தீர்ப்பு ஒன்றை தந்துள்ளது.

சமீபகாலமாகவே, பல்வேறு இடங்களில் சொத்து பிரச்சனை தொடர்பான புகார்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன. குறிப்பாக, வயது முதிர்ந்த பெற்றோர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால்தான், வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கிவருகிறார்கள். காரணம், எப்போதுமே ஒருவர் தன்னுடைய சொத்துக்களை பிறருக்கு செட்டில்மென்ட் செய்துவிட்டால், எழுதி கொடுக்கும் சொத்தை மறுபடியும் திரும்ப பெற முடியாது. அதனால்தான் இது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை என்று கூறப்படும்.

குடும்ப சூழல்கள் காரணமாக, சில பெற்றோர்கள், செட்டில்மென்ட் பத்திரம் வாயிலாக, வாரிசுகளுக்கு சொத்தை எழுதி கொடுத்து விடுகிறார்கள். வாரிசுகளும் இந்த சொத்தை பெற்றுக் கொண்டு, ஒருகாலட்டத்துக்கு பிறகு தாய்-தகப்பனை சரிவாரியாக கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், மாவட்ட ஆட்சியாளர்களிடம், அந்த  பெற்றோர்கள் கண்ணீருடன் மனு கொடுக்கும் நிலைமைக்கும் ஆளாகிறார்கள்.

அதனால்தான், செட்டில்மென்ட் பத்திரத்தை, ரத்து செய்ய வழியிருக்கிறதா? என்று ஆதங்கத்துடன் பலரும் கேள்விகள் எழுப்புகிறார்கள். இதற்காகவே, "சட்ட விதிகளுக்குட்பட்டு" வருவாய் துறை ஒருசில அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.

எப்போதுமே புதிதாக சொத்து வாங்கும்போது, அதை விற்பவர் செட்டில்மென்ட் பத்திரம் வாயிலாக பெற்றவராக இருந்தால், அதில் ஆட்சேபனை ஏதாவது பதிவாகி உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். அதேபோல, சொத்தின் மீது வருவாய் துறையில் ஏதாவது நடவடிக்கை நிலுவையில் உள்ளதா? என்பதையும் ஆராய வேண்டும்.

ஒருவேளை, ஏதாவது நிலுவைத்தொகை பாக்கி இருந்தால், அது சிக்கலை உண்டுபண்ணிவிடும். எனவே, எப்போதுமே, சொத்துக்களை வாங்கும்போது, அதன் செட்டில்மென்ட் பத்திரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்கள் வருவாய்துறை அதிகாரிகள்.

இந்நிலையில், வயதான காலத்​தில் பெற்றோர்களை தங்களின் 
பிள்​ளைகள் சரிவாரியாக 
கவனிக்​கா​விட்​டால், பெற்​றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்​ய​லாம் என்று உச்ச நீதிமன்ற நீதிப​திகள் 
தீர்ப்​பளித்​துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்புதான், பலரது கவனத்தையும் தற்போது பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்க​வில்லை... அதனால் மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்​டும் என்றும், அந்த சொத்துகளுக்கான தான பத்திரப்பதிவை ரத்து செய்ய 
வேண்​டும் என்றும், அந்த வயதான பெண் மத்திய பிரதேசம் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் 
தொடுத்​தார்.

இந்த வழக்கினை விசா​ரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் "வயதான பெற்​றோரை பிள்​ளைகள் 
கவனிக்க​வில்லை என்ற காரணத்​துக்காக தான பத்திரத்தை
(தான செட்​டில்​மென்ட்) ரத்து செய்ய 
முடி​யாது. மேலும், பிள்​ளைகள் 
கவனிக்​கா​விட்​டால், தானப் பத்திரம் செல்​லாது என்று எந்த 
நிபந்​தனையை​யும் மனுதாரர் 
விதிக்க​வில்லை. அதனால் தான பத்திரத்தை ரத்து செய்ய முடி​யாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி 
செய்​தது.

உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து அந்தப் பெண், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்​தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதி​மன்ற நீதிப​திகள் சி.டி.ரவிக்​கு​மார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்​வில் வழக்கு விசாரணைக்கு இயற்று நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து 
நீதிப​திகள் தீர்ப்பு அளித்தனர்.

அந்த தீர்ப்​பில், மத்திய பிரதேசம் உயர்நீதிமன்றம் சட்டத்​தின்படி மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.. ஆனால், மூத்த குடிமக்​களின் 
உணர்வு​களையும் பாது​காக்க வேண்டிய அவசியம் உள்ளது. சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்​றோரை தங்களின் பிள்​ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலைக்குரியதாகும்.

அப்படிப்​பட்ட சூழ்​நிலை​யில், 
பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால் 
"பெற்​றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்​தின்​படி பிள்​ளை​களுக்கு 
பெற்​றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்​ய​லாம். அந்த தான பத்திரத்தை செல்​லாது என்றும் அறிவிக்​கலாம்.

இந்த சட்டம் மூத்த குடிமக்​களுக்கு உதவி செய்​வதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் கூட்டுக்குடும்பத்​தில் இருந்து 
ஒதுக்கப்​படும் மூத்த குடிமக்கள் விஷயத்​தில் சட்டத்தை கடுமையாக செயல்​படுத்த வேண்​டும் என்ப​தை​விட, அதில் தளர்​வுகள் காட்டி சட்டத்​துக்கு விளக்கம் அளிக்க வேண்​டும். சொத்துகளை எழுதி வைத்​தவருக்கு தேவையான அடிப்படை வசதி​கள், உடல்​ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்​றவர் செய்ய 
வேண்​டும்.

அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி​கொடுத்தது 
செல்​லாது என்று அறிவிக்க​முடி​யும்" என்று உச்சநீதிமன்ற நீ​திப​தி​கள்​தீர்ப்பளித்​தனர்​.​ சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதி தந்துவிட்டு, நடுத்தெருவில் கதிகலங்கி நிற்கும் எத்தனையோ வயதான பெற்றோர்களுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது, மிகுந்த மகிழ்ச்சியையும், ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி தந்துள்ளது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...