Wednesday, 1 January 2025

தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயம் காட்பாடி தேவாலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையம் எதிரிலுள்ள தென்னிந்திய திருச்சபை வேலூர் பேராயம் காட்பாடி தேவாலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நள்ளிரவு நடந்தது. இதை முன்னிட்டு இரவு 11 மணி அளவில் இருந்து 3 மணி வரை இந்த சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த காட்பாடி தேவாலயத்தின் ஆயர் பர்ணபாஸ் ஆப்ரகாம் மற்றும் இணை ஆயர் சாமுவேல் சுந்தர்ராஜ் ஆகியோர் இந்த சிறப்பு வழிபாட்டை தலைமை வகித்து நடத்தினர். இந்த காட்பாடி தேவாலயத்தின் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த சிறப்பு வழிபாட்டில் தங்களது பங்களிப்பை செலுத்தினர். நள்ளிரவு 12 மணி அளவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். காட்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment

பெரியகுளம் தீர்த்தத் தொட்டியை தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் - சோத்துப் பாறை அணை செல்லும் வழியில் தீர்த்த தொட்டி அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் பெரியகுளம் மற்...