Monday, 6 January 2025

புகார் அளிக்க வந்தப் பெண்ணுடன் கர்நாடகா டிஎஸ்பி காமகளியாட்டத்தில் ஈடுபட்ட டிஎஸ்பிஐ கைது செய்து ஜெயில் அடைப்பு!

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம் மதுகிரியில் துணை காவல் கண்காணிப்பாளராக (50 வயதாகும்) ராமசந்திரப்பா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மதுகிரி காவல்சாரகத்திற்குட்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் ராமசந்திரப்பாவை கர்நாடக மாநில காவல்துறைத் தலைவர் அலோக் மோகன், ஐஏஎஸ்., பணியிடை நீக்கம் செய்தும், அத்துடன் அவரை கைது செய்து சிறையில் அடிக்கும்படி காவலருக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் தனிப்படை அமைத்து டிஎஸ்பி ராமச்சந்திரப்பாவை தேடி வந்த போலீசார் நேற்று அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் காவல் துணை கண்காணிப்பாளராக இருப்பவர் (50 வயதாகும்) ராமசந்திரப்பா, டிஎஸ்பி ராமசந்திரப்பாவை மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணை டிஎஸ்பி ராமசந்திரப்பா தன்னுடைய அறையில் இருந்து மற்றொரு அறைக்கு அழைத்து செல்கிறார். அங்கு வைத்து தான் இளம்பெண்ணுடன், அவர் நெருக்கமாக இருந்திருக்கிறார்.

இதனை அப்போது அருகில் இருந்த யாரோ ஜன்னல் வழியாக மறைந்து நின்று செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து டிஎஸ்பி ராமசந்திரப்பா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதேபோல் அந்த இளம்பெண் யார்.. என்ன நடந்தது என்று கேள்விகள் எழுந்தது. அந்த பெண் துமகூரு மாவட்டம், பாவகடாவைச் சேர்ந்தவர். நிலப்பிரச்சினை தொடர்பாக மதுகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்த இளம்பெண் வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அப்போது தான் டிஎஸ்பி ராமசந்திரப்பா உடன் அந்த இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் அந்த பெண்ணை தனது வலையில் வீழ்த்திய டிஎஸ்பி ராமசந்திரப்பா காவல் நிலையத்தில் வைத்தே அவருடன் காமகளியாட்டத்தில் ஈடுபட்டதும், உல்லாசம் அனுப்பவித்ததும் தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பாக அந்த பெண் தரப்பில் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை . ஆனால் பெண்ணுடன், ராமசந்திரப்பா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து பெண்ணுடன் நெருக்கமாக இருந்த டிஎஸ்பி ராமசந்திரப்பாவை கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மதுகிரி போலீசார், டிஎஸ்பி ராமசந்திரப்பா மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்கள். இந்த சம்பவம் கர்நாடகாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை மக்கள் பணியில் ஒரு உன்னதமான பணியாகும் அத்தகைய பணியில் இருந்து கொண்டு அதுவும் காவல்துறையில் நேர்மையான அதிகாரிகளும் இருக்கும் நிலையில் காவல் நிலையத்தில் வைத்து அநாகரிக்கமாக நடந்து கொண்ட அந்த இளம் பெண்ணும் ஆசைக்கு இணங்க டிஎஸ்பி ராமச்சந்திரப்பா காமகளியாட்டத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், சமூக வலைதள பக்கங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

பக்தர்களை கோயிலுக்கு உள்ளே செல்ல விடாமல். தடுக்கும் தனிநபர்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செல்வபெருமாள் கோயில் நகர் பகுதி மக்கள் சித்தூர் ரோடு புதிய மேம்பாலம் அருகில் மாரியம்மன் கோயி...