வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா ,சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் தமிழ்நாடு அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி அதன் மூலம் கிராம நிர்வாக அலுவலராக தேர்வு செய்யப்பட்டார். இவர் குடியாத்தம் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக இவர் குடியாத்தம் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் தனக்கு வட்டாட்சியராக இருந்தாலும் சரி, கோட்டாட்சியராக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி நான் சொல்வதை தான் அவர்கள் கேட்க வேண்டுமே தவிர நான் அவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்று சங்க நிர்வாகிகளிடம் மார்தட்டிக்கொள்கிறார் ஏன் கொக்கரிக்கிறார் என்றே சொல்லலாம். இவர் வெளியில் ஒன்று பேசுவதையும் உள்ளே ஒன்று நடப்பதையும் மறைத்து பொதுமக்களிடம் தான் ஒரு பெரிய மனிதர் என்பதைப் போல் காட்டிக் கொள்கிறார். ஏனென்றால் இவரது உருவம் அப்படி உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்களும், இவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது இவர் பரதராமி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேம் பள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அப்போது அந்த கிராமத்திலுள்ள புரோக்கர்களை கையில் வைத்துக்கொண்டு பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வந்தார். அதாவது அந்த கிராமத்திலுள்ள புரோக்கர் கோவிந்தன் என்பவர் மூலம் 13 வகையான சான்றுகளை வருவாய்த்துறை மூலம் வழங்குவதை பணமாக்கி கொண்டு இவர் வசூல் வேட்டை நடத்தி ஹாயாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வருவாய்த்துறை கண்டு கொள்ளாமல் விட்டதுதான் பெரிய தவறாக மாறி உள்ளது. நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை பட்டா தருவதாக கூறி அவர்களிடம் ஒரு கணிசமான தொகையை வசூல் செய்து வசூல் வேட்டையாடியுள்ளார் இந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில். சேம் பள்ளி பகுதியில் ஈச்சங்குட்டை பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவு நீர் நிலை பகுதியை தனியார் ஒருவருக்கு பட்டா செய்து கொடுத்து இதன் மூலம் ஒரு கணிசமான தொகையை கல்லா கட்டியுள்ளார் இந்த கடமை வீரன் செந்தில். அதாவது இதில் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு ஒன்றையும் சேர்த்து பட்டா செய்து கொடுத்துள்ளார் இந்த நேர்மை தவறாத கிராம நிர்வாக அதிகாரி செந்தில் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இதன் மீது அப்போதைய கோட்டாட்சியர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதிலிருந்து இவர் எப்படியோ தன்னை விடுவித்துக் கொண்டார் என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. தற்போது கூட நாங்கள் எங்கு விருப்பப்படுகிறோமோ அங்கு எங்களுக்கு இடமாற்றம் தருவார்கள். அது மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி, மாவட்ட வருவாய் அலுவலராக இருந்தாலும் சரி, கோட்டாட்சியராக இருந்தாலும் சரி, வட்டாட்சியராக இருந்தாலும் சரி என்று மார்கதட்டி கொள்கிறார் இந்த அதிகாரி என்று சொன்னால் அதுதான் உண்மை. இப்படி இவர் எங்கெங்கு என்னென்ன விரும்பத்தகாத பணிகளை செய்துள்ளார். எவ்வளவு புறம்போக்கு நிலங்களை (அரசுக்கு சொந்தமான சொத்துக்களை) தான்தோன்றித்தனமாக பணம் தருபவர்களுக்கு வாரி கொடுத்துவிட்டு இவர்களை மிரட்டி கல்லாகட்டி உள்ளது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேட்டால் என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எனக்கு பின்னால் ஒரு பெரிய சங்கமே உள்ளது. எதற்கெடுத்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் என்று நாங்கள் அதில் ஈடுபடுவோம் என்று வருவாய் துறை உயர் அதிகாரிகளை மிரட்டி வருகிறார் என்பது இதில் ஒரு குறிப்பான விஷயமாக இங்கு கருத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஊராட்சி மன்ற தலைவருடன் சேர்ந்து கொண்டு பல மோசடிகளையும் இவர் செய்துள்ளார். இதை முறைப்படி ஆய்வு செய்தால் அந்த உண்மை என்னவென்பது வெளியில் வரும். குறிப்பாக ஈச்சங்குட்டை பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி அதில் உள்ள பகுதி சொத்துக்களை அபகரித்து பட்டா அளித்துள்ளார். சேம்பள்ளி ஊராட்சியில் ஒன்றரை ஏக்கர் புன்செய் நிலத்தை மாற்றுத்திறனாளியான ராமசாமி என்பவரது நிலத்தை யசோதா க/பெ. ஏகாம்பரம் என்பவருக்கு மாற்று பட்டா வழங்கி இவர்களை கட்டி உள்ளார். தற்போது இந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியாளர், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகாரை முறைப்படி எழுத்து மூலமாக அளித்துள்ளனர். இதன் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது இவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். லஞ்ச லாவண்யத்திலேயே இவர் புரண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையை தெரிந்து கொண்ட அவர் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். குறிப்பாக புறம்போக்கு இடங்களை அளந்து பட்டா கொடுத்துவிட்டு அதில் கல்லா கட்டுவதை இவர் வழக்கமாகவே கொண்டுள்ளார். முதியோர் பென்ஷன் வழங்க வேண்டும் என்றால் அந்த சான்றிதழுக்கு ரூபாய் 5000 முதல் 10 ஆயிரம் வரையும், இலவச பட்டாக்களை வழங்குவதற்கு ரூபாய் பத்தாயிரம். அதேபோன்று இதர சான்றிதழ்களான வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுவதற்கு தலா ரூபாய் 2000 முதல் 50 ஆயிரம் வரையும், இறந்தவர்களுக்கு சான்றுகள் வழங்க வேண்டும் என்றால் 30 ஆயிரம் அநாவசியமாக இவர் வசூல் செய்து கொண்டே போகிறார். இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை வேலூர் மாவட்ட ஆட்சியாளர் எடுக்க வேண்டும் என்று இவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். இவரை வேறு மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட வெகு தொலைவிலுள்ள மாவட்டங்களுக்கு இவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று இவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சங்கம் இவருக்கு உதவ கூடாது என்றும் பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது இவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் குடியாத்தம் வட்ட செயலாளர் வெங்கடாசலம் துணை இருப்பார் என்று இவர் வெளியில் சொல்லி தனக்கு ஆதரவு இருப்பதை சொல்லாமல் சொல்லி வருகிறார் என்கின்றனர் பொதுமக்கள். ஆதலால் வருவாய்த்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் இவர் மீது துறை ரீதியான விசாரணையை விரிவான விசாரணையாக நடத்தி அதில் கிடைக்கும் உண்மை தன்மையை வைத்து இவரை நீண்ட நெடிய தூரம் வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் அல்லது இவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கிராம நிர்வாக அலுவலருக்காக அரசு செயல்படுகிறதா? அல்லது பொதுமக்கள் நலனுக்காக அரசு செயல்படுகிறதா? என்பதை விஏஓ செந்தில் மீது எடுக்கும் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த நடுநிலையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருவாய்த்துறை அமைச்சர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் மீது சாட்டையை சுழ
ற்றுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வேலூர் மாவட்ட ஆட்சியாளர் செந்தில் மீது துறை ரீதியில் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிடுவாரா? என்பதற்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை நாம் காத்திருப்போம்.
No comments:
Post a Comment